மேலும் அறிய

கிஷோர் கே சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

தலைவர்கள் மீது அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட கிஷோர் கே சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மறைந்த தலைவர்கள் மீது சமூக வலைதளமான முகநூல், டுவிட்டர்களிலும் யூ டியூப்பிலும் அவதூறு பரப்பும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. இந்த வகையில், கடந்தாண்டுகளில் திராவிட இயக்கத் தலைவர்கள் மீது சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில், மறைந்த முதல்வர் கருணாநிதி, அண்ணா மற்றுமு் பெரியார் மீது கிஷோர் கே சுவாமி என்பவர் சமூக வலைதளங்களிலும், யூ டியூப்பிலும் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றியும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார்.

இந்த நிலையில், அவர் மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த ஜூன் 10-ந் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் 153 கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1) (b) அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், 505(1) (c) ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.

இதனையடுத்து, கிஷோர் கே சுவாமியை ஜூன் 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, அவரை போலீசார் சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிஷோர் கே சுவாமி மீது இன்று குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கிஷோர் கே சுவாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களையும் மிகவும் இழிவாக பேசிவந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தருமபுரி எம்.பி.யை தரக்குறைவாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு “ சரளமாக ஆங்கிலத்திலோ, தமிழிலோ ஒரு கடிதம் கூட எழுதவராது என்றாலும் படிக்குற எல்லாரும் டாக்டர் ஆயிடனும். அப்புறம் யார்தான் பேஷண்ட்??? எல்லாரும் பல்லக்கு ஏறிட்டா பல்லக்கை யார்தான் தூக்குறதாம்??? குழந்தைகளை படுத்துவது நீட் அல்ல பெற்றோர்கள்தான்.” இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

நீட் தேர்வால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், கிஷோர் கே சுவாமியின் இந்த பதிவுக்கு பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். இதுமட்டுமின்றி தமிழகத்தில் இருந்து இந்திய அணி கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் நடராஜனை சாதிப்பெயர் குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டும் கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகினார். இதுமட்டுமின்றி, பேரறிவாளன் விடுதலைக்காக போராடி வரும் அற்புதம்மாள் பற்றியும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றியும் மிகவும் அவதூறாக பதிவிட்டுள்ளார். கிஷோர் கே சுவாமி தீவிர தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்பது  குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு கிஷோர் கே சுவாமி குடித்துவிட்டு தெருவில் ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

தலைப்பு செய்திகள்

"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget