(Source: ECI/ABP News/ABP Majha)
Gokulraj Case: சாதிய வன்மத்துடன் 9 மணிநேரம் சித்ரவதை செய்யப்பட்டு கோகுல்ராஜ் கொலை - அரசு வழக்கறிஞர்
எனது மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன் - கோகுல்ராஜ் தாயார்
சாதிய வன்மத்துடன் கோகுல்ராஜை கடத்தி கொடூரமாக கொலை செய்துள்ளதாக அரசு வழக்கறிஞர் ப.பா.மோகன் கூறினார்.
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் தண்டனை விவரங்கள் இன்று வெளியானது. அதன்படி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டாவது குற்றவாளியான ஓட்டுநர் அருணுக்கும் ஆயுள் முழுவதும் சிறைத்தண்டனை அறிவித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மற்ற 8 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சம்பத் உத்தரவிட்டுள்ளார்.
#BREAKING | கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ்-க்கு ஆயுள் முழுவதும் சிறை https://t.co/wupaoCQKa2 | #GokulRaj #Madurai #Yuvaraj pic.twitter.com/7FELO07iIK
— ABP Nadu (@abpnadu) March 8, 2022
இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் நீதிமன்றம் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் அளித்த பேட்டியில், “சாதிய வன்மத்துடன் கோகுல்ராஜை கடத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். பட்டியல் இன மாணவர் கோகுல்ராஜ் 9 மணி நேரம் துன்புறுத்தப்பட்டு சதி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் 10 பேரும் சாகும் வரை சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 நீதிபதிகளின் விசாரணைக்குப் பிறகு கோகுல்ராஜ் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
#BREAKING | கோகுல்ராஜ் கொலை வழக்கில் 2-வது குற்றவாளியான யுவராஜ் ஓட்டுநர் அருணுக்கும் ஆயுள் முழுவதும் சிறை
— ABP Nadu (@abpnadu) March 8, 2022
குற்றவாளிகள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு https://t.co/wupaoCQKa2 | #GokulRaj #Madurai #Yuvaraj pic.twitter.com/8XsZGgNImu
விடுதலையான 5 பேருக்கும் தண்டனை வழங்க வேண்டும்
இதனைத்தொடர்ந்து, கோகுல்ராஜின் தாயார் சித்ரா அளித்த பேட்டியில், “என்னை போன்றவர்களுக்கு இதுபோன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது. எனது மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கும் தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்