Financial institution fraud: அதிக வட்டி தருவதாக ரூ.9 ஆயிரம் கோடி மோசடி: தலைமறைவான நிதி நிறுவன தலைவர்கள்... துப்பு கொடுத்தால் பரிசு
மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றிய நிதி நிறுவனங்களின் தலைவர்கள் துப்பு கொடுத்தால் பரிசு அளிக்க்ப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
நிதி நிறுவனங்கள் மோசடி குறித்து தமிழ்நாடு காவல்துறை நேற்று இரவு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது,
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு, அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் பொதுமக்களிடம் பணம் பெற்றுள்ளன. அதில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம், ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட லிமிடெட், எல்.என்.எஸ் சர்வதேச நிதி சேவை என்ற நிறுவனம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை என கூறப்படுகிறது.
மோசடி:
தமிழ்நாட்டில் பல பகுதிகளில், மக்களிடம் பணம் பெற்று, அதிக வட்டி தருவதாக நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பின்னர் பணம் தராமல் ஏமாற்றியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து, ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 37 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிறுவனத்தில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 பேர் முதலீடு செய்துள்ளதாகவும், பொதுமக்கள் சுமார் ரூ. 2,438 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஆருத்ரா நிறுவனம் தொடர்பாக 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பாஸ்கர், மோகன் பாபு உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ராஜசேகர் ஹரிஸ், மைக்கேல் ராஜ், நாராயணி ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் எல்.என்.எல் நிறுவனத்தில் ஒரு லட்சம் மக்கள் முதலீடு செய்துள்ளதாகவும், ரூ. 6 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீட்டு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், லட்சுமி நாராயணன், வேதநாராயணன், ஜனார்த்தனன், மோகன்பாபு ஆகியொர் தேடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஹிஜாவு நிறுவனம் சுமார் 600 கோடி ரூபாய் முதலீடு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிறுவன வழக்கில் சவுந்தராஜன் என்பவரும், அவரது மகன் அலெக்சாண்டர் என்பவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Also Read: தீபாவளி சீட்டு நடத்தி மோசடி நடத்திய குடும்பம்! ரூ.20 கோடி வசூல்… கைத்துப்பாக்கியுடன் 4 பேர் கைது!
தக்க சன்மானம்:
இந்நிலையில், 3 நிறுவனங்கள் தொடர்பாக தலைமறைவாக உள்ளவர்கள் மீது புகார் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவிக்கையில், 3 நிறுவனங்களில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் முதலீடு செய்துள்ளனர். மேலும் 9 ஆயிரம் கோடிக்கு மேலாக முதலீடு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இழந்த பணத்தை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Also Read: Crime: அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு - பெரம்பலூரில் கொள்ளையர்கள் கைவரிசை