மேலும் அறிய

Crime: சொந்த மகன் பிறப்பின் மீது சந்தேகம்.. கொடுமைப்படுத்தியே கொலை செய்த தந்தை

பிட்டா வினோத் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன் பெடபாடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

ஆந்திராவில் தனக்கு பிறந்த குழந்தை மீது சந்தேகம் ஏற்பட்டு அதனைக் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சம்பவம் அங்குள்ள ஏலூரு மாவட்டத்தில் உள்ள பெடப்பாடு மண்டலம் நாயுடுகுடம் பகுதியில் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் பிட்டா வினோத் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன் பெடபாடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 11 வயதில் ரிஷி பாபு என்ற மகன் உள்ள நிலையில் வினோத்துக்கு குழந்தை பிறந்ததில் இருந்தே சந்தேகம் வர தொடங்கியுள்ளது. 

அவர் தன்  தன் மனைவியின் நடத்தை குறித்து அடிக்கடி சந்தேகமடைந்து பிரச்னை செய்து வந்துள்ளார். இந்த பிரச்னையில் ரிஷி பாபு தனக்குப் பிறந்த மகன் அல்ல என பிட்டா வினோத் உறுதியாக நம்பி வந்துள்ளார். இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்திருக்கிறார். முதலில் பொறுத்து பொறுத்துப் பார்த்த அவரின் மனைவி, ஒரு கட்டத்தின் வெறுப்பாகி வினோத்தை பிரிய முடிவெடுத்திருக்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவரின் தொல்லை தாங்க முடியாமல் தன் மகனைப் பெடபாடுவில் உள்ள தனது அம்மா வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். 

இதனைத் தொடர்ந்து கடந்த 2024ம் மீண்டும் மனைவி,மகனைத் தேடி பிட்டா வினோத் பெடபாடு வீட்டுக்கு வந்துள்ளார். அதன்பின்  பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்துக்கு நடைபெற்றது. அதன்பிறகு வினோத் தன் மனதை மாற்றிக்கொண்டார் என்று நம்பிய அவரது மனைவி,மகனுடன் நாயுடுகுடம் வீட்டுக்குத் திரும்பினார் அங்கு சென்ற பிறகும் வினோத்தின் நடத்தையில் சிறிதும் மாற்றம் ஏற்படவில்லை.  துன்புறுத்தல் அதிகரித்த நிலையில் நீ என் மகன் இல்லை என்று கூறி தன் குழந்தையை சித்திரவதை செய்துள்ளார். அவனை பள்ளிக்கு கூட அனுப்பாமல் தடுத்துள்ளார். பிட்டா வினோத் மகன் தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையை அணுகி புகாரளித்தான். 

இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு வந்த அதிகாரிகள் ஆலோசனை வழங்கி பிட்டா வினோத்தை எச்சரித்தனர். ஆனாலும் அவரது மனநிலை சிறிதும் மாறவில்லை. வழக்கத்தை விட மகன் ரிஷி பாபுவை துன்புறுத்த தொடங்கினார். அந்த வகையில் நேற்று முன்தினம்  பெடபாடுவில் உள்ள சிறுவனின் தாத்தா பண்டி ரமேஷுக்கு பிட்டா வினோத்தின் அக்கம் பக்கத்தினரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் வீட்டிற்கு வெளியே ரிஷி பாபு உயிரிழந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பண்டி ரமேஷ் மற்றும் உறவினர்கள் ரிஷிபாபு சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுவனின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்த உறவினர்கள், இது தந்தை பிட்டா வினோத்தில் செய்யப்பட்ட கொலை என்று கருதி, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வினோத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசார்ணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

விழுப்புரம் அருகே நள்ளிரவில் கொடூரம்: ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ரவுடி
விழுப்புரம் அருகே நள்ளிரவில் கொடூரம்: ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ரவுடி
என்னங்க இப்படி ஓடுது? அரசு பேருந்து LED திரையில் வந்த விசித்திர வாசகம்! வீடியோ வைரல்..!
என்னங்க இப்படி ஓடுது? அரசு பேருந்து LED திரையில் வந்த விசித்திர வாசகம்! வீடியோ வைரல்..!
கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!
கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!
மார்க்கெட்டிங் பெண் தலையில் அடித்துக் கொன்று 9 பவுன் நகை கொள்ளை !! வாலிபர் சிக்கியது எப்படி ?
மார்க்கெட்டிங் பெண் தலையில் அடித்துக் கொன்று 9 பவுன் நகை கொள்ளை !! வாலிபர் சிக்கியது எப்படி ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Russia Crude Oil Tariff: ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
Ertiga on EMI: சக்திவாய்ந்த சிக்கனமான குடும்ப SUV.! ரூ.2 லட்சம் முன்பணத்தில் மாருதி எர்டிகா வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
சக்திவாய்ந்த சிக்கனமான குடும்ப SUV.! ரூ.2 லட்சம் முன்பணத்தில் மாருதி எர்டிகா வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget