Crime: 10 ஆயிரம் கடன் கொடுத்து பயங்கரம்.. பாலியல் தொழிலில் சிறுமியை சிக்கவைத்த பெண் கைது..
தன்னிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 16 வயது சிறுமியை பெண் ஒருவர் பாலியல் தொழில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 16 வயது சிறுமியை பெண் ஒருவர் பாலியல் தொழில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை நெஞ்சை பதைப்பதைக்க வைக்கும் நிலையில் அமைந்துள்ளன.
பிரிட்டன் நாட்டின் நியூகேஸ்டல் பகுதியைச் சேர்ந்தவர் டைலர் ஜோ வாக்கர். இந்தப் பெண்மணி அப்பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி ஒருவருக்கு முதலில் பணம் கொடுத்து உதவியுள்ளார். அதன்பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அச்சிறுமி சென்றுள்ளார். அப்போதும் அந்த சிறுமிக்கு டைலர் உதவியுள்ளார். இதைத் தொடர்ந்து ஒருநாள் திடீரென்று தான் கொடுத்த £100(10 ஆயிரம் ரூபாய்) காசை உடனடியாக திருப்பி தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்தச் சிறுமி இன்னும் சில நாட்கள் கழித்து தருகிறேன் என்று கூறியுள்ளார். எனினும் அதை ஏற்க மறுத்த அப்பெண் அந்தச் சிறுமியை ஒரு நபரிடன் உடலுறவு வைத்து கொண்டு அதன்மூலம் வரும் காசை தருமாறு கேட்டுள்ளதாக தெரிகிறது. அவரிடம் கடன் வாங்கியதால் வேறு வழியில்லாமல் அந்தச் சிறுமி இதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. அதை வைத்து அன்று ஒரே நாளில் சுமார் 17 பேரை அவருடன் உடலுறவு வைத்து கொள்ள டைலர் ஏற்பாடு செய்துள்ளார். அதன்மூலம் வந்த வருமானத்தில் £700 டைலர் எடுத்து கொண்டு மீதம் £3000 (2.98 லட்சம் ரூபாய்) பணத்தை அச்சிறுமியிடம் அளித்துள்ளார்.
இதன்பின்னர் அடுத்த நாளும் சுமார் 13 பேருடன் அச்சிறுமியை பாலியல் உறவு வைக்க கட்டாயப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் 2 நாட்களில் சுமார் 30 பேரிடம் அச்சிறுமியை உடலுறவு வைத்து கொள்ள வைத்துள்ளார். மேலும் அச்சிறுமியை மிரட்டி பாலியல் தொழில் ஈடுபட்ட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அச்சிறுமி அளித்த புகாரின் பெயரில் டைலர் ஜோ வாக்கரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது டைலர் தன்னுடைய குற்றங்களை ஒப்புக் கொண்டார்.
மேலும் டைலருக்கு மனநல பிரச்னை இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன் இந்த சிறை தண்டனைக்கு முன்பாக 2ஆண்டுகள் அவர் மனநல சிகிச்சை பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்