மேலும் அறிய

பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்த ஜோடி... பக்கா பிளானுடன் பார்த்த கேடி வேலை... குற்றவாளியை பிடிக்க தனிப்படை தீவிரம்!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து தந்திரமாக திருடிய தம்பதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ராதிகா. கார்த்திக் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளிப்கார்ட்டில் நிறுவனத்தில் சுமார்  44 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச், 44,900 ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினி மற்றும் 546 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருள் என மூன்று பொருட்களை கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்துள்ளார். 

பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு ஈரோடு சங்கு நகர் பகுதியில் செயல்பட்டுவரும் இன்ஸ்டா கார்ட் நிறுவனம் தான் டெலிவரி மற்றும் ரிட்டர்ன் பணிகளை செய்து வந்தது. இந்தநிலையில், அந்த நிறுவனத்தில் டெலிவரி பையனாக  பணிபுரியும் நவீன் என்பவர் சம்பவத்தன்று கார்த்திக் ஆர்டர் செய்த மடிக்கணினி, ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட மூன்று பொருட்களை கார்த்திக் வீட்டில் கொடுத்துள்ளார். 

அப்போது பொருளை பெற்றுக்கொண்ட ராதிகா, தனது கணவர் கார்த்திக்கிடம் அந்த பொருள்களை கொடுத்துவிட்டு டெலிவரி பாய் நவீனிடம் சுமார் 30 நிமிடம் ஜாலியாக பேசி கவனத்தை திசை திருப்பியுள்ளார்.

பின்னர் கார்த்திக் மூன்று பார்சல்களில் ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ள 2 பார்சலை நவீனிடம் கொடுத்து விட்டு தன்னால், ஆன்லைனில் பணம் செலுத்த முடியவில்லை என்று தெரிவித்து, வாங்கிய ஒரு பொருளுக்கு மட்டும் ரூ.546 கொடுத்து விட்டு நாளை பேமென்ட் செய்து மற்ற இரண்டு பொருட்களை பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். 

பின்னர் நவீன் மற்ற டெலிவரிகளை முடித்துக் கொண்டு இரவு அலுவலகத்திற்கு வந்து நடந்தவற்றை எல்லாம் தெரிவிக்க, சந்தேகமடைந்த உயரதிகாரிகள் சிசிடிவி முன்பு வைத்து அந்த பார்சலை திறந்து பார்த்தனர். அப்போது பிரித்த பார்சலில் ஆப்பிள் வாட்சுக்கு பதிலாக சாதாரண மலிவான பழைய வாட்ச் வைக்கப்பட்டு இருந்தது.


பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்த ஜோடி... பக்கா பிளானுடன் பார்த்த கேடி வேலை... குற்றவாளியை பிடிக்க தனிப்படை தீவிரம்!

அதேபோல்,  மடிக்கணினிக்கு பதில் மரக்கட்டை வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தினர் கார்த்திக் வீட்டுக்கு சென்று அவரது மனைவி ராதிகாவிடம் கேள்வியெழுப்பியபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசி அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தினர் மலையம்பாளையம் காவல்நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 5 ந்தேதி புகார் செய்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக் வீட்டுக்கு தேடி சென்றபோது அந்த ஜோடி தப்பி சென்று விட்டது தெரியவந்தது.

இதையடுத்து கார்த்திக் ராதிகா குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது. சேலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பிரிவில் வேலை பார்த்து வந்த கார்த்திக், அதே நிறுவனத்தில் வேலைபார்த்த ராதிகா என்ற பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளான்.

இவர்கள் காப்பீடி மற்றும் வங்கி கடன் ஏஜெண்டாக வேலை பார்த்த அனுபவத்தில் எளிதாக போலி ஆவணங்களை தயார் செய்து மோசடியும், கார்த்திக், ராதிகா தம்பதி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறைக்கும் சென்றுள்ளனர். இவர்கள் மீது கோவை, மதுரை, சென்னை போன்ற இடங்களிலும் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில் தற்போது சென்னையில் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் ராதிகாவை சென்னை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து, சென்னை காவல்துறையினர் கார்த்திக்கை தேடிவரும் நிலையில், தற்போது மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget