மேலும் அறிய

Chattisgarh: வேன் மீது டிரக் நேருக்கு நேர் மோதிய விபத்து: 11 பேர் உயிரிழப்பு - சத்தீஸ்கரில் சோகம்!

சத்தீஸ்கரின் பலோடா பஜார் மாவட்டத்தில் டிரக் மீது வேன் மோதியதில் பதினொரு பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கரின் பலோடா பஜார் மாவட்டத்தில் டிரக் மீது வேன் மோதியதில் பதினொரு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று இரவு நடைபெற்றது. பட்டபரா துணை-பிரிவு போலீஸ் அதிகாரி (SDOP) சித்தார்த் பாகேல் கூறுகையில், "வேன் டிரக் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த சம்பவம் பட்டபரா (கிராமப்புற) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கமாரியா கிராமத்தில் நடந்தது. வேன் ஒரு விழாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, கமாரியா கிராமத்தில் ​​அர்ஜுனி என்ற இடத்தில் டிரக் மோதியதில் 11 பேர் இறந்தனர். மேலும் எட்டு பேர் காயமடைந்தனர்” எனக் கூறினார்.  

காயமடைந்தவர்களை அப்பகுதியினர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஒரு சிலரை தீவிர சிகிச்சைகாக ராய்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

சத்தீஸ்கர் கான்கேர் பகுதியில் சமீபத்தில் இதே போன்ற சம்பவம் நடைபெற்றது. பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரக் மீது மோதியதில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆட்டோ ஓட்டுனர் மற்றும் ஒரு குழந்தை மட்டும் பலத்த காயத்துடன் தப்பித்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.  

இந்த விபத்தை பற்றி சுகாதார அதிகாரி அவினாஷ் கேர் கூறுகையில், “ 8 குழந்தைகளை எற்றி ஆட்டோ சென்றுள்ளது. எதிரில் வரும் டிரக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். உயிருக்கு போராடி வரும் ஒரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த குழந்தைக்கு மேல் சிகிச்சை அளிக்க ராய்ப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ ஓட்டுனரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக”, கூறினார்.

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Embed widget