மேலும் அறிய

11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமான வழக்கில் திடீர் திருப்பம் - மேலும் 5 பேர் போக்சோவில் கைது

’’ஏற்கெனவே இந்த வழக்கில் 81 வயது முதியவர் வெங்கடேசன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்’’

விழுப்புரம் அருகே 16 வயது சிறுமி  11ஆம் படித்து வந்தார். இவரது பெற்றோர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். எனவே புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கி இருந்த மாணவி சொந்த ஊருக்கு வந்தார். அப்போது பெரியம்மா குப்பு பராமரிப்பில் பள்ளிக்கு சென்றுவந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

POCSO | 18 வயதிற்கு கீழ் இருக்கும்  குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? போக்சோ சட்டம் சொல்வது என்ன?

உடனே உறவினர்கள் அந்த சிறுமியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். மாணவியின் வயிறு பெரியதாக இருந்ததால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அந்த மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமான வழக்கில் திடீர் திருப்பம் - மேலும்  5 பேர் போக்சோவில் கைது

இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 81), இளையராஜா (28), மோகன் ஆகியோரை கைது செய்தனர். இதில் மோகன் மாணவிக்கு அண்ணன் உறவு முறையாவார். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்துக்கு மாணவியின் பெரியம்மா குப்பு உடந்தையாக இருந்துள்ளார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இந்த சம்பவத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (25), பிரபு (37), பாபு (22), சத்யராஜ் (28) ஆகியோரும் மாணவியை வன்புணர்வு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. சிறுமியின் பெரியம்மா குப்பு கூலி வேலைக்காக வெளியே சென்றுவிடுவார். தனியாக இருக்கும் மாணவியிடம் அண்ணன் உறவுமுறை கொண்ட மோகன் அடிக்கடி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்துள்ளார். இது மோகனின் தாய் குப்புவுக்கு தெரியவந்தும் அதனை கண்டும் காணாதது போல் இருந்துள்ளார்.

Three people have been arrested, including an 81-year-old man who sexually assaulted an 11th grader

இந்த விபரம் 81 வயது முதியவர் வெங்கடேசனுக்கு தெரிய வந்தது. அவரும் மாணவியை மிரட்டி வன்புணர்வு செய்த கொடுமை அரங்கேறி உள்ளது. இந்த வி‌ஷயத்தை தெரிந்து கொண்ட ஒருவர் பின் ஒருவராக மாணவியை வன்கொடுமை செய்துள்ளனர். பெற்றோரை இழந்ததால் மாணவிக்கு உறவினர்களே வில்லனாக மாறி உள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 8 பேர் போக்சோ சட்டத்தில் கைதாகி உள்ளனர். மேலும் கிடுக்கிப்பிடி விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையில் ஏழுமலை ஆந்திரமாநிலம் நெல்லூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் நெல்லூர் விரைந்து சென்று ஏழுமலையை இன்று அதிகாலை கைது செய்தனர். கைதான அவர் செஞ்சி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்படுத்து வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Embed widget