தி.மு.க. எம்.எல்.ஏ. உறவினர் கல்குவாரியில் தொழிலாளி உயிரிழப்பு - நடந்தது என்ன?
கல்குவாரி கிரசரில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் 10க்கும் மேற்ப்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கார்கேஸ்வரர் போரோ என்பவரும் அங்கு வேலை பார்த்து வந்துள்ளார்.
குளித்தலை அருகே அய்யர்மலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. உறவினர் கல்குவாரியில் நடந்த விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை சுற்றி 2 கிலோமீட்டர் தூரத்தில், வரவூர் சாலை, சரவணபுரம் சாலை என அப்பகுதியில் 3 கல்குவாரியுடன் கிரசர் செயல்பட்டு வருகிறது. இதில் 2 கல்குவாரி மற்றும் கிரசர் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் உறவினர் பெயரில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது.
வெளிமாநிலத்தவர்:
சரவணபுரம் செல்லும் சாலையில் உள்ள கல்குவாரி கிரசரில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கார்கேஸ்வரர் போரோ (19 ). என்பவரும் அங்கு வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜல்லி உடைக்கும் கிரசரில் வேலை பார்த்திருந்தபோது விபத்து ஏற்ப்பட்டு விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த செய்தி அறிந்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் யாரையும் கல்குவாரிக்குள் உள்ளே அனுமதிக்கவில்லை.
விபத்து குறித்து மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காவல் துறையிடம் விளக்கம் கேட்க முயற்சித்த போது சரியான தகவலை தர மறுத்து விட்டனர். திமுக எம்எல்ஏ உறவினர் கல்குவாரியில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதிகள் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு ரகளை வாலிபர் மீது வழக்கு
குளித்தலை அடுத்த, கொசூர் பஞ்சாயத்து உப்பிலியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமரை. இவர் கடந்த இரவு 8 மணிக்கு அப்பகுதியில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே ஊர் சேர்ந்த ஆனந்த் என்பவர், கையில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தார். இது குறித்து தாமரை தட்டி கேட்டு உள்ளார். அங்கு இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு ஆனந்த் தான் கையில் வைத்திருந்த அறிவாளால் தாமரையை வெட்டினார். இதில் காயமடைந்த தாமரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொகை மலை போலீசார் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.