Crime : பதைபதைக்க வைக்கும் சம்பவம்.. ஜல்லிக்கட்டு வீரர் கொடூர கொலை.... கை, கால்களை கட்டி உடலை குட்டையில் வீசிய கொடூரம்...!
ஜல்லிக்கட்டு வீரர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime : ஜல்லிக்கட்டு வீரர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆலம்பாடி கிராமத்தில் கொல்லப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல்குவாரி தற்போது கல்குவாரி செயல்படாமல் உள்ளது. இந்த கல்குவாரியில் குட்டை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த குட்டையில் ஆண் சடலம் ஒன்று மிதந்தது. இதை பார்த்த அப்பகுதியை மக்கள் குஜிலியம்பாறை போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடலை மீட்க முயற்சித்தனர். நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அதில் உடலுடன் சேர்ந்து கல் ஒன்று கட்டப்பட்டு, இறந்தவரின் கை, கால்கள் மற்றும் வாய்ப்பகுதியும் கட்டப்பட்டு இருந்தது. இதனை அடுத்து, அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கல்குவாரி குட்டையில் வீசி இருப்பதாக தெரிந்தது.
உயிரிழந்தவர் அணிந்திருந்த சட்டையில் ராமு பாய்ஸ், கேஜிஎம் அச்சிடப்பட்டிருந்தது. அதனை வைத்து சுற்றுவட்டார கிராமங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் கருங்குளத்தைச் சேர்ந்த வீரப்பனின் மகன் மணி (23) என்றும், இவர் ஜல்லிக்கட்டு வீரர் என்பதும் தெரியவந்தது.
ஜல்லிக்கட்டு வீரரான மணி பல்வேறு ஊர்களுக்கு சென்று காளைகளை அடக்கி வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரனை செய்து வருகின்றனர்.
குஜிலியம்பாறை வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் ஆய்வு செய்ததில் இங்கு செயல்பட்டு வரும் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமாக ஆலம்பாடி, மல்லபுரம், கோட்டநத்தம், சேர்வைக்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இளைஞரை கல்லை கட்டிக் கொலை செய்யப்பட்ட கல்குவாரியில் கடந்த 10 ஆண்டில், ஒரு இளம் பெண் உள்பட மூன்று பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜல்லிக்கட்டு வீரர் கொடூராமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Suicide : புது செல்போன் கேட்ட கணவன்.. வாங்கி தர மறுத்த மனைவி.. ஈரோட்டில் ஒரு சோக சம்பவம்..
10 ஆயிரத்திற்கு 3 குழந்தைகளை கொத்தடிமைகளாக விற்ற தாய் - ஆடுமேய்க்க விட்டுச்சென்ற அவலம்