மேலும் அறிய

Suicide : புது செல்போன் கேட்ட கணவன்.. வாங்கி தர மறுத்த மனைவி.. ஈரோட்டில் ஒரு சோக சம்பவம்..

ஈரோடு மாவட்டத்தில் புது செல்போன் கேட்டு மனைவி வாங்கி தராததால் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் புது செல்போன் கேட்டு மனைவி வாங்கி தராததால் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள ராஜீவ் நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது மனைவி பிரியதர்ஷினியுடன் வசித்து வந்தார். இவர்களது திருமணம் காதல் திருமணமாகும். இந்த தம்பதியினருக்கு 9 வயதில் வைஷ்ணவன் என்ற மகன் உள்ளார். 

இதனிடையே  முருகேசனுக்கு கடந்த 2 மாதங்களாக  நிரந்தர வேலை இல்லாததால் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.அதேசமயம் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் முருகேசன் வீட்டில் இருந்த நகை மற்றும் பொருட்களை விற்று மது குடித்து வந்ததாகவும்  சொல்லப்படுகிறது. 

இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி முருகேசன் தனக்கு புதிதாக செல்போன் வாங்கி தரவேண்டும்  என்று பிரியதர்ஷினியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரோ வாங்கி தர முடியாது என கூறியுள்ளார். இதன் காரணமாக முருகேசன், பிரியதர்ஷினி இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த முருகேசன், மனைவி, மகனை வீட்டை விட்டு வெளியேற்றி கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து பிரியதர்ஷினி தனது மகனுடன் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதற்கிடையில் சிறிது நேரம் கழித்து முருகேசன் பிரியதர்ஷினியை செல்போனில் அழைத்து வீட்டுக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார். ஆனால் மன வருத்தத்தில் இருந்த பிரியதர்ஷினி அப்பா வீட்டுக்கு வந்து நீங்களே என்னை அழைத்து செல்லுங்கள் என கூறியதாக சொல்லப்படுகிறது. கிட்டதட்ட பிப்ரவரி  7 ஆம் தேதி வரை பிரியதர்ஷினி தனது கணவர் முருகேசன் வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளார். ஆனால் இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் முருகேசன் வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் பிரியதர்ஷினிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரும் தன் பெற்றோருடன் வந்து கதவை தட்டிப் பார்த்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். இதில் மின்விசிறியில் துப்பாட்டாவால் முருகேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது.

அவரது உடலும் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. அவரது உடலை பார்த்து பிரியதர்ஷினி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று முருகேசன் உடலைக் கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
Honda Elevate: கம்பீரத்தின் அடையாளம் Honda Elevate கார்.. விலை, மைலேஜ் எப்படி?
Honda Elevate: கம்பீரத்தின் அடையாளம் Honda Elevate கார்.. விலை, மைலேஜ் எப்படி?
’யூபிஎஸ்சி தேர்வில் எங்கள் மாணவர்களே டாப்பர்கள்’- பொய் விளம்பரத்தால் பிரபல பயிற்சி மையத்துக்கு ரூ.11 லட்சம் அபராதம்!
’யூபிஎஸ்சி தேர்வில் எங்கள் மாணவர்களே டாப்பர்கள்’- பொய் விளம்பரத்தால் பிரபல பயிற்சி மையத்துக்கு ரூ.11 லட்சம் அபராதம்!
Embed widget