மேலும் அறிய

பெண்ணை நெருக்கமாக பழகவிட்டு வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல் - சிக்கியது எப்படி?

பெண்ணை நெருக்கமாக பழகவிட்டு வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு.  பெண் உட்பட மூவரைக் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பழனியில் பைனான்சியர்களை குறி வைத்து பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


பெண்ணை நெருக்கமாக பழகவிட்டு வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல் - சிக்கியது எப்படி?

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரைச் சேர்ந்தவர்கள் ராணி சித்ரா, நாராயணன், துர்க்கை ராஜ், ராணி சித்ரா காவல்துறையில் சில காலம் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் ராணி சித்ரா பழனி நகரில் பைனான்ஸ் தொழில் செய்பவர்களை குறி வைத்து ஆசை வார்த்தை கூறி, நெருக்கமாக பழகி பின்னர் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். பழனியைச் சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்யும் சுகுமார் என்பவர் ராணி சித்ராவின் வலையில் விழுந்து பல லட்சம் ரூபாயை இழந்த நிலையில் மீண்டும், மீண்டும் பணம் கேட்டு ராணி சித்ரா மிரட்டியதால் பழனி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் ராணி சித்ரா மற்றும் நாராயணன், துர்க்கைராஜ் ஆகியோர் சேர்ந்து தன்னை மிரட்டி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்பதாகவும், தர மறுத்தால் ராணி சித்ராவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி நற்பெயரை கெடுத்து விடுவதாகவும் கூறி மிரட்டியதாக புகாரில் தெரிவித்துள்ளார். புகாரைப் பெற்ற பழனி நகர காவல் துறையினர் நாராயணன், துர்க்கை ராஜ் இருவரையும் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது ராணி சித்ராவை  ஆண்களிடம் நெருக்கமாக பழக வைத்து பின்னர் போட்டோ, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது. நாராயணன், துர்க்கைராஜ் இருவரையும் பிடித்த போலீஸார் அவர்களின் செல்போனில் இருந்த வீடியோக்களை பறிமுதல் செய்தனர்.


பெண்ணை நெருக்கமாக பழகவிட்டு வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல் - சிக்கியது எப்படி?

தொடர்ந்து நடத்திய விசாரணையில்  பைனான்சியர் சுகுமார் போன்று பல பேரிடம் ராணி சித்ரா  மிரட்டி பணம் பறித்ததும், பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் பலரும் பயந்து போலீசில் புகார் தெரிவிக்காமல் ராணிசித்ராவிடம் பணத்தை கொடுத்து விட்டு வெளியே சொல்ல முடியாமல் இருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. துர்க்கை ராஜ் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள், அடிதடி கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. பழனியில் ரவுடித்தனம் செய்து வந்த துர்க்கை ராஜை  ராணிசித்ரா பைனான்சியர்களை மிரட்ட பயன்படுத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த ராணி சித்ரா நாராயணன், துர்க்கை ராஜ் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பழனியில் பைனான்சியர்களை மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget