திண்டுக்கல்: பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.20 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள குண்டாம்பட்டி பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள குண்டாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (24). இவர், கடந்த ஆண்டு 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர்.
மேலும் சிறுமியை போலீசார் மீட்டனர். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட ஆனந்தகுமாருக்கு, சிறுமியை வன்கொடுமை செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார்.
Wimbledon : விம்பிள்டன் தொடரில் இனி வீராங்கனைகள் இதை அணியலாம்.. அமலுக்கு வரும் புதிய விதி!
மேலும், சிறுமியை கடத்தி சென்றதற்காக 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார். சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்