பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை.. விபரீத முடிவெடுத்த தம்பதி.. 2 பெண்களை நரபலி கொடுத்த கொடூரம்!
கொச்சியில் லாட்டரி விற்று வந்த தருமபுரியை சேர்ந்த பத்மா என்பவரை ஏமாற்றி அழைத்துச் சென்று நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சியில் லாட்டரி விற்று வந்த தருமபுரியை சேர்ந்த பத்மா என்பவரை ஏமாற்றி அழைத்துச் சென்று நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணக்காரர்கள் ஆக வேண்டும் என்ற ஆசையில் லைலா மற்றும் பகவந்த் சிங் என்ற தம்பதி 2 பெண்களை கடத்தி சென்று நரபலி கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பத்தனம்திட்டாவிற்கு விரைந்துள்ள காவல்துறையினர், நரபலியில் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டி எடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த பெண்கள் கொச்சியில் வசிந்து வந்த தருமபுரியை சேர்ந்த பத்மா மற்றும் காலடியைச் சேர்ந்த ரோஸ்லி என தெரியவந்துள்ளது. கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி காணாமல் போன புகார் தொடர்பாக கடவந்திரா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விவரங்கள் பின்னர்தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். சடலங்களை மீட்க கொச்சியில் இருந்து குழுவினர் திருவல்லா சென்றுள்ளனர். மேலும் அந்த குழுவுடன் வருவாய் கோட்ட அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் விரைந்துள்ளனர்.
திருவல்லா தம்பதிகளான பக்வால் சிங் மற்றும் லைலா சார்பில் நரபலி கொடுத்ததாகக் கூறப்படும் பெண்கள் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாவூரைச் சேர்ந்த ஷிஹாப் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.