மேலும் அறிய

காஞ்சிபுரத்தில் துணை வட்டாட்சியரின் மனைவி தற்கொலை..? - சாவில் சந்தேகமென பெற்றோர் புகார்

அவரது கணவர் தான் கழுத்து நெறித்து கொலை செய்துள்ளார் என பெற்றோர்கள், உறவினர்கள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணிபுரிபவர் சதீஷ். இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மனைவி சங்கீதா மற்றும் இரு குழந்தைகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். துணை வட்டாட்சியராகிய சதீஷ் மது போதைக்கு அடிமையாகி நாள்தோறும் குடித்துவிட்டு வந்து காதல் மனைவி சங்கீதா உடன் தகராறு செய்து வந்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் துணை வட்டாட்சியரின் மனைவி தற்கொலை..? - சாவில் சந்தேகமென பெற்றோர் புகார்

கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் நிலையில் சங்கீதா தனது தாய் வீட்டிற்கும் சென்று தங்கி உள்ளார். பின்னர் சதீஷ், மாமியார் வீட்டில் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்துகொண்டு மனைவியை தனது வீட்டிற்கு அழைத்து  வந்துள்ளார். இந்நிலையில் நேற்றும் கணவன் மனைவி இடையே  மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் சங்கீதா தனது வீட்டின் அறையில் மர்மமான முறையில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது கணவர் போலீசாருக்கும்,உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் துணை வட்டாட்சியரின் மனைவி தற்கொலை..? - சாவில் சந்தேகமென பெற்றோர் புகார்

அதன்பின்  காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து  துணை வட்டாட்சியர் சதீஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் சங்கீதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி  சதீஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சங்கீதாவின் தாய் மற்றும் குடும்பத்தினர் புகார் அளித்ததன் பேரில் காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் துணை வட்டாட்சியரின் மனைவி தற்கொலை..? - சாவில் சந்தேகமென பெற்றோர் புகார்

மேலும் தனது மகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அவரது கணவர் நாடகமாடுவதாகவும், சங்கீதாவை  அவரது கணவர் தான் கழுத்து நெறித்து கொலை செய்துள்ளார் என சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரத்தில் குடும்பப் பிரச்சனை காரணமாக துணை வட்டாட்சியரின் மனைவி  சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Suicidal Trigger Warning

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

BRICS Summit: அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் - ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு

Tiruchendur: அரோகரா.. விண்ணதிர நடந்த திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. தமிழில் ஓதப்பட்ட மந்திரங்கள்!

IND vs ENG 2nd Test: ஏளனமாக பேசிய ஸ்டோக்ஸ்... ஆணவத்தை அடக்கிய இந்தியா - சொன்னது ஞாபகம் இருக்கா?

IND China: ரஃபேல் விவகாராத்தில் சீனாவின் குட்டு, இந்தியாவிற்கு எதிராக பிளான்? போட்டுக் கொடுத்த ஃப்ரான்ஸ்

ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BRICS Summit: அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் - ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு
BRICS Summit: அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் - ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு
Tiruchendur: அரோகரா.. விண்ணதிர நடந்த திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. தமிழில் ஓதப்பட்ட மந்திரங்கள்!
Tiruchendur: அரோகரா.. விண்ணதிர நடந்த திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. தமிழில் ஓதப்பட்ட மந்திரங்கள்!
IND vs ENG 2nd Test: ஏளனமாக பேசிய ஸ்டோக்ஸ்... ஆணவத்தை அடக்கிய இந்தியா - சொன்னது ஞாபகம் இருக்கா?
IND vs ENG 2nd Test: ஏளனமாக பேசிய ஸ்டோக்ஸ்... ஆணவத்தை அடக்கிய இந்தியா - சொன்னது ஞாபகம் இருக்கா?
IND China: ரஃபேல் விவகாராத்தில் சீனாவின் குட்டு, இந்தியாவிற்கு எதிராக பிளான்? போட்டுக் கொடுத்த ஃப்ரான்ஸ்
IND China: ரஃபேல் விவகாராத்தில் சீனாவின் குட்டு, இந்தியாவிற்கு எதிராக பிளான்? போட்டுக் கொடுத்த ஃப்ரான்ஸ்
Vallakottai murugan temple: 17 ஆண்டுகளுக்குப் பிறகு! வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகம்!

IND Vs Eng 2nd Test: ஒரே வின்னு தான்.. மொத்த சாதனைகளையும் அள்ளிப்போட்டாச்சு, ஆசியாவின் முதல் அணியாமே..

Ind vs Eng Test: கேப்டனாக கலக்கிய கில்! 58 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு! எட்ஜ்பாஸ்டனில் வரலாற்றை மாற்றிய இந்தியா

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க

Embed widget