மெட்ரோவில் இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்... நேபாளுக்கு தப்பியவரை தட்டித் தூக்கிய போலீஸ்!
அவர் கீழ் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்தார், ஆனால் போலீசார் அதை எதிர்த்ததால் அது நிராகரிக்கப்பட்டது.
ஜோர் பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக 40 வயது ஆண் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் கோட்லா முபாரக்பூரைச் சேர்ந்த மானவ் அகர்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றுவிட்டார், மேலும் சமீபத்தில் முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்தார்.
போலீசாரின் கூற்று படி, அந்த பெண் தனக்கு நடந்த துயரத்தை தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த போலீசார் அந்த நபரை மெட்ரோ நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் தேடி வந்துள்ளனர். விசாரணையின் போது அந்த பெண் கூறியது , ‛என்ன வென்றால்,மெட்ரோவில் பயணித்தபோது, ஒரு நபர் தன்னை அணுகி, முகவரியைக் கண்டுபிடிக்க தனது உதவிமாறு கேட்டார். நானும் அவருக்கு வழி கூறி உதவினேன். பின்னர் நான் ரயிலில் இருந்து இறங்கி ஒரு பிளாட்பாரத்தில் அமர்ந்து , கார் ஒன்று புக் செய்து கொண்டிருந்தேன். அந்த நபர் மீண்டும் என்னைஅணுகி ,மேலும் முகவரி குறித்து சந்தேகம் கேட்டார். நான் அதை பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்,’ என்று அந்த இளம் பெண் தெரிவித்திருந்தார்.
இளம் பெண் புகாரைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். சிக்கந்தர்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்குள் கேட் நம்பர் 1ல் உள்ள எஸ்கலேட்டர் வழியாக, அந்த நபர் காலையில் சிக்கந்தர்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்குள் நுழைந்தபோது, அவரை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் ஆய்வு செய்ததில், சிக்கந்தர்பூர் மெட்ரோ ஸ்டேஷன் அருகே, குற்றம் சாட்டப்பட்டவர் சில பழங்களை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அருகில் உள்ள சலூன் ஒன்றில் 20 நிமிடம் அவர் இருந்துள்ளார். போலீசார் முடிதிருத்துபவரிடம் விசாரித்து, இ-வாலட் மூலம் பணம் செலுத்தும் முறையை ஆய்வு செய்தனர், அதன்பிறகு, நுகர்வோர் விண்ணப்பப் படிவம் (CAF), குற்றம் சாட்டப்பட்டவரின் அழைப்பு விவரம் பதிவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டன. அதன் பின் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தீவிரதேடுதல் நடத்தப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் அடையாளம் காணப்பட்டு, அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது, அது பூட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் ஜூன் 4 ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது.அவர் விமானம் மூலம் நேபாளத்தில் உள்ள காத்மாண்டுவுக்குச் சென்றுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
அந்த நபர் திருமணமாகாதவர், தற்போது வேலையில்லாமல் இருக்கிறார். அவர் தற்போது ஹரியானா மாநிலம் குர்கானில் வசித்து வந்தார். வாடகை வீடு மூலம் கிடைக்கும் வருவாயில் அவர் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதற்கிடையில், அவர் கீழ் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்தார், ஆனால் போலீசார் அதை எதிர்த்ததால் அது நிராகரிக்கப்பட்டது. தொடர் முயற்சியால், சாகேத் கோர்ட் அருகே குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.