நடிகைக்கு இன்ஸ்டாவில் சுய இன்ப வீடியோவை அனுப்பிய இளைஞர்...!
நடிகை அந்த நபரை அம்பலப்படுத்தும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் பின்னர் முகத்தை மூடிக்கொண்டு வீடியோவில் மன்னிப்பு கேட்டார்.
பெண் நகைச்சுவை நடிகைக்கு இளைஞர் ஒருவர் தனது சுயஇன்ப வீடியோவை இன்ஸ்டாகிராமில் அனுப்பியது டெல்லி அதிரச் செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருப்பவர் பெண் நகைச்சுவை நடிகை அஞ்சல் அகர்வால். இவருக்கு இளைஞர் ஒருவர் தனது சுயஇன்ப வீடியோவை இன்ஸ்டாகிராமில் அனுப்பியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகை, குற்றம் சாட்டப்பட்டவரை அம்பலப்படுத்தினார். அத்துடன் மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.
மேலும், நடிகை அந்த நபரின் அருவருத்தக்க வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் முகமூடியால் முகத்தை மறைத்து வீடியோவில் மன்னிப்பு கேட்டார்.மேலும் படிக்க: தாய், மகளை கொலை செய்து சடலங்களுடன் பாலியல் உறவு: விழுப்புரம் வழக்கில் சைக்கோ கொள்ளையன் கைது!
இன்ஸ்டாவில் வீடியோவை வெளியிட்ட பிறகு, நடிகையின் நண்பர் அந்த வீடியோவை சைபர் செல்லுக்கு அனுப்பினார். குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் தொடர்பு கொண்ட பிறகு, அவர் மன்னிப்பு கேட்டார் என்று பாதிக்கப்பட்ட பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
பின்னர் போலீசார் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டனர். ஆனால் நடிகை தன்னிடம் அந்த இளைஞர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறினார். மேலும் படிக்க: நண்பனின் சகோதரியிடம் தகாத உறவு : தட்டிக்கேட்ட நண்பனின் முதுகில் கத்தியால் குத்திய நபரால் பரபரப்பு
இதனைத் தொடர்ந்து, அந்த நடிகை தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த மனிதர்கள் எல்லாவற்றிலும் மிகவும் பயந்த இனம். அதனால்தான் அவர்கள் தங்களை சக்தி வாய்ந்தவர்களாக உணர இந்த நிலைக்குச் செல்கிறார்கள். தகவலறிந்த ஒரு நபர் அந்த நடவடிக்கையை எடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சைபர் செல் மிக விரைவாக நடவடிக்கை எடுத்தது. விஷயங்கள் மாறிவருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பதிவிட்டார்.
A short story-
— Aanchal Agrawal (@awwwnchal) December 7, 2021
Guy sent a masturbating video.
I got angry and put it on my IG.
A follower sent it to Indian Cyber Cell.
They messaged. He immediately apologised to them, they forwarded to me.
I asked them for a video apology. Guy wore a mask for it, but the message is delivered. pic.twitter.com/aMiLWdsyq0
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்