மேலும் அறிய

Crime : குடும்ப சண்டை.. ஜன்னல் கண்ணாடிகள்.. மகளை கொடூரமாக கொன்ற தந்தை.. நடந்தது என்ன?

குடும்ப சண்டையின்போது, 18 வயது பெண் தனது தந்தையால் தாக்கப்பட்டதால் வியாழக்கிழமை இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு டெல்லியில் குடும்பசண்டையின் போது, 18 வயது பெண் தனது தந்தையால் தாக்கப்பட்டதால் வியாழக்கிழமை இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சண்டையில், பெண்ணின் தாய் மற்றும் இரண்டு சகோதரிகளும் காயமடைந்துள்ளனர்.

ஆனால், அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்றும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் தெரிவிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றத்தை செய்துவிட்டு தப்பி ஓடிய தந்தை இன்னும் கைது செய்யப்படவில்லை. தாய் மற்றும் அவரது மூன்று மகள்களும் உறவினர் ஒருவரால் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 7.15 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.

வடகிழக்கு டெல்லியில் உள்ள கரவால் நகரில் வசிக்கும் பீம்சென் (45) என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஜன்னல் கண்ணாடியால் அவரை தாக்கியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். சண்டையில் தலையிட்டபோது அவர் தனது மகள்களைத் தாக்கி உள்ளார்.

இதனால், மகள் ஒருவரின் வயிற்றில் காயம் ஏற்பட்டது. மகளின் மார்பு மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தாக்குதல் சம்பவத்தையடுத்து தந்தை அங்கிருந்து தப்பியோடி உள்ளார். காயமடைந்தவர்கள், உறவினர் ஒருவரின் உதவியை பெற்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

"சிகிச்சையின் போது இளைய மகள் மரணம் அடைந்தார். மற்றொரு மகள் இன்னும் சிகிச்சையில் உள்ளார். மூன்றாவது மகள் மற்றும் அவர்களின் 42 வயதான தாயார் முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்" என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவரின் இளைய சகோதரர் ரோஷன் லால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு வேலை எதுவும் இல்லை என்றும் மது அருந்தும் பழக்கம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து விரிவாக விவரித்த அவர், "கொரோனா தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட பொது முடக்கத்திற்கு முன்பு, எனது சகோதரர் ஆட்டோ ரிக்சாவை ஓட்டி வந்தார். ஊரடங்குக்கு பிறகு, அவர் தனது மனைவியுடன் அப்பகுதியில் காய்கறிகளை விற்று வந்தார்.

ஆனால், மூத்த மகளுக்கு வங்கியில் வேலை கிடைத்ததும், அவர் வேலையை விட்டுவிட்டு எதுவும் செய்யாமல் இருந்தார். குடிப்பழக்கத்துக்காக கணவனும் மனைவியும் அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டிருக்காங்க. ஆனா இதுக்கு முன்னாடி இப்படி எதுவும் நடந்ததில்லை" என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget