Crime: 55 வயது காதலியை துண்டு, துண்டாக வெட்டி ப்ரீட்ஜில் வைத்த 48 வயது காதலன்..! மிரண்டுபோன போலீஸ்..!
ஷர்த்தா கொலை வழக்கை போலவே லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலியை அவரது காதலனே கொலை செய்த சம்பவம் ஹைதரபாத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Crime: ஹைதராபாத்தில் பணப் பிரச்சனையில் தனது காதலியை அவரது காதலனே 6 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.
தொடரும் கொலைகள்
டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதைத்தொடர்ந்து, இதேபோன்ற கொலை சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நிகழ்வது மக்களை உச்சக்கட்ட அச்சத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், ஷர்த்தா கொலை வழக்கை போலவே லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலியை அவரது காதலனே கொலை செய்த மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பணப் பிரச்சனை
தெலங்கானாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (48). இவர் அனுராதா ரெட்டி (55) என்பவருடன் கடந்த சில ஆண்டுகளாகவே லிவ் இன் முறையில் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அவரை தனது வீட்டின் ஒரு பகுதியில் தரை தளத்திலேயே தங்க வைத்து உள்ளார். இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து அனுராதாவிடம் இருந்து ரூ.7 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார் சந்திர மோகன்.
இதற்கிடையில், அனுராதாவுக்கு பணத்தேவை இருந்ததால் சந்திரமோகனிடம் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். ஆனால் சந்திரமோகன் பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் இவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளளது. மேலும், இருவருக்கும் இடையே நாள்தோறும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, சந்திமோகன், அனுராதாவை தாக்கி உள்ளதாகவும் தெரிகிறது. நாளுக்கு நாள் அனுராதாவால் மன உளைச்சல் அதிகமாகனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டார் சந்திமோகன்.
6 துண்டுகளாக வெட்டிய கொடூரம்
இந்நிலையில், கடந்த மே 12ஆம் தேதி மறுபடியும் 2 பேருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சந்திரமோகன், அனுராதாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதில் அனுராதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதற்கு பிறகு சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார். பிறகு, அனுராதாவின் உடலை அப்புறப்படுத்த அவரின் உடல்களை 6 துண்டுகளாக வெட்டியுள்ளார்.
அவைகளை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக உடல் துண்டுகளை வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாத்துள்ளார். பின்னர், பிணவாடை வராமல் இருக்க ரூம் ஃப்ரெஷ்னரை பயன்படுத்தி இருக்கிறார். மேலும், டெட்டால், வாசனை திரவியங்கள், ஊதுபத்தி குச்சிகள், கற்பூரம் போன்றவற்றை பயன்படுத்தி இருக்கிறார்.
கைது
யாருக்கு சந்தேகம் வராமல் இருக்க உயிரிழந்த அனுராதாவின் செல்போனில் இருந்து, மெசேஜ்களையும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் சந்திரமோகன். மே 15ஆம் தேதி அனுராதாவின் தலையை, ஆட்டோவில் எடுத்துச் சென்று, குப்பை கொட்டி இருக்கும் பகுதிக்கு வந்து வீசிச் சென்றுள்ளார்.
பின்னர், அடுத்தடுத்த துண்டுகளை அப்புறப்படுத்துவதற்குள் போலீசில் சிக்கியுள்ளார். மேலும், சந்தேகத்தில் பேரில் இவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சந்திரமோகன் உண்மையை ஒப்புக் கொண்டதை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.