மேலும் அறிய

Youtuber Madan Update : அத்துமீறல், ஆபாசம், பப்ஜி : மதனை விசாரணைக்கு ஆஜராக சைபர் பிரிவு போலீஸ் சம்மன்!

மதனை நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது சென்னை புளியந்தோப்பு சைபர் பிரிவு போலீஸ்

ஆன்லைனில் ஆபாசமாக பேசிக்கொண்டே, யூடியுபில் பப்ஜி விளையாடும் மதனை சைபர் பிரிவு காவல்துறையினர் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். புளியந்தோப்பு சைபர் பிரிவு காவல் நிலையத்தில் மதன் மீது புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பப்ஜி விளையாட்டை சட்ட விரோதமாக யூடியுப் பக்கத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து விளையாடியதோடு, ஆபாசம் நிறைந்த பேச்சுகளை சிறுமிகளிடம் பேசுவது, தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே பப்ஜி விளையாடுவது போன்ற செயல்களை செய்த மதன் மீது பலர் புகார்களை முன்வைத்தனர். மேலும் சமூக வலைத்தளத்திலும் அவரை கைது செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஏற்கனவே மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இது தொடர்பாக அவரின் யூடியுப் பதிவுகளை ஆராய்ந்து வந்தது. இந்நிலையில் சைபர் பிரிவு காவல்துறையும் இந்த விவகாரத்தில் விசாரணையை துவங்கி இருக்கிறார்கள், அதன் ஒரு பகுதியாக நாளை மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பட்டுள்ளது. மேலும் அவரது யூடியுப் பக்கத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிய : சிறுமிகளிடம் பப்ஜியில் ஆபாசம் - யார் இந்த மதன் ?

பப்ஜி விளையாட்டிற்கு தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் அடிமையாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட சிலர் மதனின் தீவிர யூடியுப் ஃபாலோவராகவும் இருக்கின்றனர். இப்படியாக சுமார் 8 லட்சம் பேர் மதனின் யூடியுப் பக்கத்தை பின் தொடர்கின்றனர். இதில் பெரும்பாலும் இருப்பவர்கள் 18 வயதிற்கும் குறைவான டீனேஜ் பருவத்தை சேர்ந்தவர்கள். இவருடைய யூடியுப் பக்கத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்துடன் இணைத்து வைத்துள்ள மதன், யூடியுப் பக்கத்தில் ஆபாசமாக விளையாடுவது மட்டுமின்றி, சில சிறுமிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு வருமாறு அழைப்பதும், அங்கே அந்தரங்க பேச்சுகளில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மேலும் அறிய : ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்

பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி கண்முடித்தனமாக என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல், சிறுமிகள் பலரும் யூ ட்யூப் நேரலையில் ஆபாசமாக பேசும் அவலமும் இங்கே நடைபெற்று கொண்டு இருக்கிறது. தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில் உள்ள சில ட்ரிக்ஸ் பற்றி பேச ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்ட மதனின் யூடியூப் சேனல் இன்று தமிழ்நாட்டின் இளம் தலைமுறையை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் பேரபாயமாக மாறியிருக்கிறது. இங்கே ட்ரிக்சைவிட மணிக்கணக்கில் ஆபாச வார்த்தைகள் தான் அதிகமாக பேசப்படுகிறது.

இந்நிலையில் விரைவில் அவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மதனின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget