(Source: ECI/ABP News/ABP Majha)
ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!
யூடியுப் ஆன்லைன் பப்ஜி விளையாட்டில் சிறுமிகளிடம் ஆபாச பேச்சு - அத்துமீறல் செய்த மதனை கைதுசெய்ய குரல் எழுப்பும் சமூக வலைதளங்கள்!
பப்ஜி என்னும் மிக பிரபலமான விளையாட்டை சட்ட விரோதமாக VPN (virtual private network) முறையில் விளையாடி யூடியுப் பக்கத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்பவர்தான் மதன். ஆபாசம் நிறைந்த பேச்சுகளை பெண்களிடம் பேசுவது, தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே பப்ஜி விளையாடுவது, அந்தரங்கமாக பேச இன்ஸ்டாகிராம் வர சொல்லி அழைப்பது போன்று பல்வேறு விதமான அத்துமீறல்களில் இவர் ஈடுபட்டுள்ளார். பப்ஜி விளையாட்டிற்கு தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் அடிமையாக இருக்கும் நிலையில், 18 வயதிற்கு குறைவான டீனேஜ் பருவத்தை சேர்ந்த பலர் மதனை பின் தொடர்கின்றனர்.
மேலும் அறிய :சிறுமிகளிடம் பப்ஜியில் ஆபாச பேச்சு : சிக்கிய ஆன்லைன் கேமர் மதன்! முழுமையான விவரம்...
இந்நிலையில் யூடியுப், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அத்துமீறிய மதனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்கள் கொதித்து வருகின்றன. #ArrestMadhanOP என்னும் ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
Who the hell is this guy? And how dare he insults everyone’s mothers? And most importantly, why the heck he’s still roaming free? People like him should be locked behind the bars for the rest of their lives. #ArrestMadhanOP @Udhaystalin https://t.co/2uBNFtfDAv
— Shafana (@phenomenal_mess) June 13, 2021
சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, தனக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பவர் குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, சிறையில் அடைக்க வேண்டும் என ட்விட்டர் பதிவு செய்துவருகின்றனர்.
For Those Who Don't Know About Madan
— Arulraj (@I__Arulraj) June 12, 2021
இவனுக்கு Youtubeல 8லட்சம் Subscribers
முக்கால்வாசி School Students
இவன் Pubg Stream பண்றான் இவன் Channel Fullஆவே Womensஐ கொச்ச கொச்சயா பேசுவான்
👇👇👇👇 pic.twitter.com/nDg8G1SR0L
8 லட்சம் பேர் மதனின் யூ டியூப் பக்கத்தை பின்தொடரும் நிலையில், அதில் பெரும்பாலும் ஃபாலோ செய்பவர்கள் பள்ளி மாணவர்களும், மாணவிகளும்தான். அவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுவது குறித்து பதிவிட்டுள்ள ஒரு நபர்.
@mkstalin @Udhaystalin @copmahesh1994 உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன் இது போன்ற ஒரு மனித விலங்கிற்கு தரும் தண்டனை அடுத்த முறை இவன் போன்றவர்கள் பயந்து நடுங்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அவனால் பாதிக்கப்பட்ட அனைத்து உடன் பிறவா சகோதரிகளின் அண்ணனாக கேட்டு 🙏#ArrestMadhanOP
— rajsekar (@rajseka14337718) June 13, 2021
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்.
நியாயமா அவன கைது தான் செய்யணும். #ArrestMadhanOP
— அஜய் சுப்ரமணியம் வி (@ajaydmk67) June 13, 2021
கைது செய்ய வலியுறுத்தல் - #ArrestMadhanOP அதுவே நியாயம் என ஒருவர் கருத்து.
#ArrestMadhanOP @the_jasonsamuel will be joining with us. Pls set reminder!
— Sonia Arunkumar (@rajakumaari) June 13, 2021
Makkale! https://t.co/BwJ9Jlk0KZ
இன்று மாலை ட்விட்டர் ஸ்பேஸஸில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடைபெற உள்ளதாக பதிவு செய்துள்ளார்கள்.