மேலும் அறிய

Cyber crime: ஆன்லைன் Tradingல் அதிக லாபம்; ரூ.36 லட்சத்தை இழந்த வியாபாரி; சைபர் மோசடியில் சிக்கிய புதுச்சேரி

புதுச்சேரியில் போலி பங்குச்சந்தை இணையலிங்க் மூலம் வியாபாரியிடம் ரூ. 36 லட்சம் மோசடி.

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி பங்குச்சந்தை இணையலிங்க் மூலம் வியாபாரியிடம் ரூ. 36 லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் குமாரவேல்; வியாபாரி. இவரை ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் மர்ம கும்பல் இணைத்தனர். அந்த குழுவில் ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்கும் வழிகள் குறித்து வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.

திடீரென மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் குமாரவேலுவை தொடர்பு கொண்டு பகுதி நேர வேலையாக, பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய குமார வேல் மர்ம நபர் அனுப்பிய லிங்க் மூலம் பணம் செலுத்தி முதலீடு செய்யும் பணியை துவக்கினார். பல தவணைகளாக ரூ. 36.45 லட்சம் பணம் செலுத்தி வர்த்தகம் செய்ததில் ரூ. 4 கோடி லாபம் ஈட்டியதுபோல் காட்டியது.

பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சித்த போது மேலும் பணம் செலுத்த வேண்டும் என, மர்ம நபர் கூறினார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குமாரவேல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதுபோல், ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த சத்யநாராயணனை தொடர்பு கொண்ட மர்ம நபர், உங்களின் மொபைல் போன் குற்ற வழக்கில் தொடர்பில் உள்ளது. வழக்கில் இருந்து மொபைல் போனை நீக்க வேண்டும் என கூறி, 24 ஆயிரம் ரூபாய் பெற்று ஏமாற்றி உள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த எழிலரசு கடன் செயலி மூலம் கடன் பெற்று திருப்பி செலுத்தியும், கூடுதலாக பணம் கேட்டு எழிலரசுவின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி மர்ம நபர் மிரட்டி உள்ளார். இதனால் 12,600 ரூபாயை மர்ம நபருக்கு அனுப்பிய பின்னரும், தொடர்ந்து மிரட்டுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித் தார்.

இதுபோல் நேற்று முன்தினம் மட்டும் குமாரவேல் உட்பட நபர்களிடம் 36.83 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளது குறித்து, சைபர் கிரைம் போலீஸ் விசாரித்து வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டு மட்டும் ஆன்லைன் மூலமாக மோசடி கும்பல், 64.2 கோடி ரூபாயை பொது மக்களை ஏமாற்றி அபகரித்துள்ளனர். இதில், பெண்களுக்கு எதிராக 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 12 வழக்குகளில், குற்றவாளிகளை கைது செய்து, 11 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்கள், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரை 1930 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.

அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.

சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க

மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Embed widget