மேலும் அறிய
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தையை விற்பனை செய்யும் கும்பல் - சினிமா பாணியில் அரங்கேறிய வடலூர் சம்பவம்
ஒருவர் பெற்றெடுத்த குழந்தையை தேவையற்றது (Unwanted Babies) என்று கருதும் பெற்றோரிடம் இருந்து குழந்தையை வாங்கி, குழந்தை இல்லாதவர்களுக்கு விற்கும் கும்பல் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

குழந்தை விற்பனை - கடத்தல் கும்பல் கைது
கடலூர் அருகே குழந்தைகள் வாங்கி விற்கும் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்களாக நான்கு பேரிடம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டம் வடலூரில் சித்தா மருத்துவக் சிகிச்சையகம் நடத்தி வருபவர் மெஹர்னிசா (67). இவர் தன்னை சித்த மருத்துவர் என்று காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளார். பெற்றெடுத்த குழந்தையை தேவையில்லை என்று கருதுபவர்கள் அல்லது குடும்ப வறுமையின் காரணமாக குழந்தை வளர்க்க முடியாதவர்களை கண்டறிந்து அவர்களிடம் பணத்தை கொடுத்து குழந்தையை வாங்கி அதை அதிக தொகைக்கு விற்கும் வேலையை மெஹர்னிசா மற்றும் அவருடன் இணைந்து சிலர் செய்து வந்துள்ளனர்.
குறிப்பாக கடலூர் மாவட்ட குழந்தைகள் ஹெல்ப்லைனிற்கு (Child Helpline) வடலூரை சேர்ந்த சுடர்விழி(வயது 37) என்ற பெண்மணி சந்தேகத்திற்குரிய வகையில் இரண்டு மாதக் குழந்தை ஒன்றை வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ததில், சுடர்விழி என்பவரிடம் குழந்தை இருந்தது உறுதியானது.
பின்னர் விசாரணையில், அந்த குழந்தையின் உண்மை தாய் நீங்கள் என்பதை நிரூபிக்கும் வகையான பிறப்பு மற்றும் மருத்துவ சான்று என எந்த ஆதாரமும் அப்பெண்ணிடம் இல்லை என்பது விசாரணையில் கண்டறிந்தனர். மேலும் சுடர்விழியிடம் விசாரணை செய்ததில் இது தன்னுடைய குழந்தை இல்லை என்பதை ஒத்துக்கொண்டார். மேலும் இந்த குழந்தையை வடலூரை சேர்ந்த மெஹர்னிசா என்பவரிடம் இருந்து ரூ.3.50 லட்சத்திற்கு வாங்கியதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் இது தொடர்பாக வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மெஹர்னிசா என்பவரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் குழந்தை விற்பதற்கு இடைத்தரகர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் காவல்துறையினர் கண்டறிந்த நிலையில் புவனகிரியை சேர்ந்த ஷீலா மற்றும் சீர்காழியை சேர்ந்த ஆனந்தன் உள்ளிட்டோரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் ஷீலா என்பவர் குழந்தைகளை வாங்கி, மெஹர்னிசாவிடம் கொடுக்கும் வேலையை செய்கிறார். மெஹர்னிசா வாங்கும் குழந்தையை தேவைப்படும் நபர்களுக்கு விற்பதற்கு ஏற்பாடு செய்யும் இடைத்தரகர் பணியை ஆனந்தன் செய்து வந்துள்ளார். இதுமட்டுமின்றி இந்த வழக்கில் மேலும் சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது என சிதம்பரம் காவல் துறை உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தெரிவித்தார்.
இதுவரை இரண்டு குழந்தைகள் விற்கப்பட்டது விசாரணை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை கடத்தலா? குழந்தை பறிப்பா என்பதெல்லாம் அடுத்த கட்ட விசாரணையில் தெரியவரும் என்றும் காவல் துறையினர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
விழுப்புரம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement