Cruise Ship Drugs Case:போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான் நிரபராதி என தகவல்
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் நிரபராதி என தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானும், அவரின் நண்பர்களும் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். ஆர்யன் கான் ஒரு மாதம் சிறையில் இருந்த பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை Narcotics Control Bureau விசாரித்து வந்தது.
#BREAKING Narcotics Control Bureau gives clean chit to Aryan Khan in drugs-on-cruise case.#AryanKhan pic.twitter.com/RhBpJ7QbZD
— Live Law (@LiveLawIndia) May 27, 2022
இந்நிலையில், ஆர்யன் கானனை நிரபராதி என்று அவரின் பெயரை சார்ஜ் சீட்டில் இருந்து நீக்கியுள்ளது. தேசிய போதைப்பொருள் தடுப்புப் அமைப்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஆர்யன் கான் குற்றாவாளி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்குப் பின்னணி:
கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி மும்பைக்கு வந்த சொகுசு கப்பலில் போதை பொருள் பார்டி நடப்பதாக தகவல் கிடைத்தை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு அந்த கப்பலில் சோதனை நடத்தியது. அதன்பின்னர் அக்கப்பலில் இருந்து 13 கிராம் கஞ்சா மற்றும் 1.33 லட்சம் பணம் ஆகியவற்றை கைப்பற்றியதாக கூறியது. அத்துடன் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கான் உள்பட 20 பேரை இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆர்யான் கானிற்கு கடந்த 30ஆம் தேதி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கை விசாரித்து வந்த போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே சில முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவருடம் இருந்து அந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணை குழு தன்னுடைய அறிக்கையை சமர்பித்துள்ளது.