குழந்தையை தாக்கிய கொடூர தாய்.. ஆந்திராவுக்கு தேடிச் சென்று கைது செய்த போலீசார்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குழந்தையை கொடுமைப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் தாய் துளசி கைது
செஞ்சி அருகே, பெற்ற குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து குழந்தையை தாக்கிய தாய் துளசி மீது செஞ்சி சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் தந்தை வடிவழகன் புகார் அளித்தார் . 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், துளசியிடம் விசாரணை நடத்த ஆந்திராவுக்கு சென்றனர். இதனிடையே, தவறான நடத்தையால், துளசி தமது குழந்தையை தாக்கி வீடியோ எடுத்ததாக, குழந்தையின் தந்தை தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் குழந்தையின் தந்தை வடிவழகன் அளித்த புகாரில் தாய் துளசியை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் போலீசார் கைது செய்தனர். குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முன்னதாக, குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் சமூக வலைதளங்களில் வைரலானார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மணலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் வடிவழகன். இவருக்கும் 2016 ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்த துளசி என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்யப்பட்டது. இந்நிலையில் 3 வருடமாக சென்னை தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.
இந்தநிலையில் 2019 காலகட்டத்தில் இவர்கள் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூர் கிராமத்திற்கு குடி வந்தனர். சில நாட்களாக வேறு ஒருவரிடம் தொடர்ந்து தொலைபேசியில் துளசி பேசி வருவதாக கூறபடுகிறது. இதனால் கணவர் வடிவழகன் மனைவி துளசியிடம் சண்டையிட்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
பிரதீப் என்கிற ஒன்றரை வயது குழந்தை மற்றும் கோகுல் என்ற 3 வயது ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஒன்றரை வயதான குழந்தை பிரதீப்பை துளசி கொடுமைப்படுத்தி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து மணலப்பாடி கிராமத்தில் விசாரிக்கச் சென்றபோது இது சம்பவம் மூன்று மாதத்திற்கு முன்னதாக நடந்ததாகும், அவள் மேல் சந்தேகம் ஏற்பட்டு கேள்வி கேட்டதால், அவருடைய தாய் வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தனர். பின்பு அவருடைய செல்போன் வீட்டில் இருந்த நிலையில் அதை எடுத்துப் பார்க்கும்போது அதிலுள்ள வீடியோக்களில் குழந்தையை கொடுமைப்படுத்திய சம்பவங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது
சினிமா பாணியில் சிறுவன் கடத்தல் : துப்பு கிடைத்த 24 மணிநேரத்தில் அதிரடியாக மீட்ட காவல்துறை.. எப்படி?