மேலும் அறிய

Crime: போதை வெறியில் கொடூரம்.. மாலை போட்டதால் கட்டுப்பாடாக இருக்க சொன்ன தாய்.. மகன் செய்த பயங்கரம்..

மது அருந்த பணம் தராத தாயை மகன் பீர் பாட்டிலாலேயே குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, வியாசர்பாடி, சாஸ்திரி நகர் 11ஆவது தெருவைச் சேர்ந்தவர் அப்புனு (வயது 50). இவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது  மனைவி கண்ணகி (வயது 45). இவர்களுக்கு அஜய் (வயது 22) என்ற மகனும், அமலா என்ற பெண்ணும் உள்ளனர். அமலா திருமணமாகி தன் கணவருடன் வசித்து வரும் நிலையில்,இவர்களது மகன் அஜய் ரயில்வே ஒப்பந்தப் பணிகளில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

ஆனால் அஜய் கொஞ்சம் கொஞ்சமாக போதைக்கு அடிமையான நிலையில், ஒப்பந்ததாரர்கள் அஜய்யை வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். மேலும்  வேலையில்லாமல் ஊர் சுற்றி வந்த அஜய், மது அருந்தி விட்டு தன் தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கடைபிடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிப்.07ஆம் தேதி இரவு அஜய்யின் தந்தை அப்புனு இரவு வேலைக்குச் சென்ற நிலையில், பிப்.08 அதிகாலை 4 மணியளவில் போதையில் குடிப்பதற்கு பணம் கேட்டு தன் தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் அஜய்.

ஆனால் தாய் கண்ணகி பணம் தர மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த அஜய் தான் குடித்துக் கொண்டிருந்த பீர் பாட்டிலை உடைத்து அதனைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளார்.

தன் தாயின் தலை, முகம் உள்ளிட்ட உடலின் பல இடங்களில் கொடூரமாகக் குத்தி அஜய் தாக்கிய நிலையில், பலத்த காயமடைந்த கண்ணகி, வலியால் அலறியுள்ளார். தொடர்ந்து கண்ணகியின் அலறல் சத்தம் கேட்டு பதறியடித்துச் சென்று அங்கு போய் பார்த்த அக்கம் பக்கத்தினர், எம்கேபி நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், தொடர்ந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்று, கண்ணகியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

மற்றொருபுறம் இவ்வழக்கை விசாரணை செய்து வந்த எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான காவல் துறையினர், தப்பி ஓடிய அஜயை பிப்.08 மதியம் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மகா சிவராத்திரி வருவதால் சிவபெருமானுக்காக மாலை அணிந்து மது அருந்தாமல்  இருக்கும்படி தன் தாய் கூறியதாகவும், ஆனால் மீண்டும் மாலை அணிந்து கொண்டே குடிக்கத் தொடங்கியதாகவும், இதனால் தன்னைக் கண்டித்த தாயை பீர் பாட்டிலால் தான் குத்தியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அஜய்யை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தார். இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கண்ணகி பிப் 09 நள்ளிரவு ஒரு மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இந்நிலையில், இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல் துறையினர் தொடந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Waqf Amendment Bill: இன்று தாக்கலாகிறது வக்பு மசோதா? நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா? பாஜகவிற்கு பலம் இருக்கா?
Waqf Amendment Bill: இன்று தாக்கலாகிறது வக்பு மசோதா? நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா? பாஜகவிற்கு பலம் இருக்கா?
TN Electricity Bill: தமிழக மக்களின் கஷ்டம் ஓவர்.. மாதந்தோறும் மின்சார கட்டணம் - எப்போது முதல் அமல் தெரியுமா? எவ்வளவு லாபம்?
TN Electricity Bill: தமிழக மக்களின் கஷ்டம் ஓவர்.. மாதந்தோறும் மின்சார கட்டணம் - எப்போது முதல் அமல் தெரியுமா? எவ்வளவு லாபம்?
NITHYANANDA: நான் செத்துட்டேனா? ஓடிவந்த நித்தியானந்தா - கைலாசாவில் இருந்து என்னெல்லாம் சொல்லி இருக்காரு?
NITHYANANDA: நான் செத்துட்டேனா? ஓடிவந்த நித்தியானந்தா - கைலாசாவில் இருந்து என்னெல்லாம் சொல்லி இருக்காரு?
Trump Govt. Atrocity: ட்ரம்ப் நிர்வாகம் அட்ராசிட்டி.. ஒரே நாள்ல ஒரே துறைல 10,000 பேர் வேலை காலி.. எதுக்கு தெரியுமா.?
ட்ரம்ப் நிர்வாகம் அட்ராசிட்டி.. ஒரே நாள்ல ஒரே துறைல 10,000 பேர் வேலை காலி.. எதுக்கு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Cadre Fight | மிரட்டல்..கல்வீச்சு..அடிதடி..அத்துமீறிய விசிக பெண் நிர்வாகி பரபரப்பு காட்சிகள்EPS And OPS Meets Modi: தமிழ்நாடு வரும் மோடி! EPS, OPS போடும் ப்ளான்! பாஜக கூட்டணியில் மாற்றம்?Annamalai BJP : அண்ணாமலை பதவி நீக்கம்? சீனுக்கு வந்த நயினார்! ஆட்டம் காட்டும் அமித்ஷாIrfan Controversy | ”அசிங்கமா இல்லையா..” இழிவுபடுத்திய இர்பான்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Waqf Amendment Bill: இன்று தாக்கலாகிறது வக்பு மசோதா? நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா? பாஜகவிற்கு பலம் இருக்கா?
Waqf Amendment Bill: இன்று தாக்கலாகிறது வக்பு மசோதா? நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா? பாஜகவிற்கு பலம் இருக்கா?
TN Electricity Bill: தமிழக மக்களின் கஷ்டம் ஓவர்.. மாதந்தோறும் மின்சார கட்டணம் - எப்போது முதல் அமல் தெரியுமா? எவ்வளவு லாபம்?
TN Electricity Bill: தமிழக மக்களின் கஷ்டம் ஓவர்.. மாதந்தோறும் மின்சார கட்டணம் - எப்போது முதல் அமல் தெரியுமா? எவ்வளவு லாபம்?
NITHYANANDA: நான் செத்துட்டேனா? ஓடிவந்த நித்தியானந்தா - கைலாசாவில் இருந்து என்னெல்லாம் சொல்லி இருக்காரு?
NITHYANANDA: நான் செத்துட்டேனா? ஓடிவந்த நித்தியானந்தா - கைலாசாவில் இருந்து என்னெல்லாம் சொல்லி இருக்காரு?
Trump Govt. Atrocity: ட்ரம்ப் நிர்வாகம் அட்ராசிட்டி.. ஒரே நாள்ல ஒரே துறைல 10,000 பேர் வேலை காலி.. எதுக்கு தெரியுமா.?
ட்ரம்ப் நிர்வாகம் அட்ராசிட்டி.. ஒரே நாள்ல ஒரே துறைல 10,000 பேர் வேலை காலி.. எதுக்கு தெரியுமா.?
TN Lake Man: தஞ்சையின் பெருமை.. தமிழ்நாட்டின் ஏரி மனிதன் - யார் இந்த நிமல் ராகவன்? ஊர் போற்றும் சாதனை..!
TN Lake Man: தஞ்சையின் பெருமை.. தமிழ்நாட்டின் ஏரி மனிதன் - யார் இந்த நிமல் ராகவன்? ஊர் போற்றும் சாதனை..!
IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
Embed widget