மேலும் அறிய

Crime : குளிர்பானத்தில் மயக்கமருத்து கொடுத்து பெண் பாலியல் வன்கொடுமை.. ஹோட்டலில் நடந்த பதைக்கவைக்கும் கொடூரம்..

சென்னை அம்பத்தூரில் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூரில் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றம் அடுத்த சோழவரம் பகுதியைச் சேர்ந்தவர் டெய்சி (42). அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றிய  நபரின் வாயிலாக மதுராந்தகத்தைச்  சேர்ந்த  சுரேஷ் (51) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. டெய்சி அவருக்கு மகளிர் குழு வாயிலாக கடன் வாங்கி கொடுத்துள்ளார். அவர் பணத்தை சரியாக செலுத்தாததால் டெய்சி அவரை கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன் சுரேஷ் மொத்த பணத்தையும் கட்டுவதாக கூறி, சோழவரம் பெரியார் நகரில்தான் தங்கியுள்ள அறைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், டெய்சிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சுரேஷ் அவரை பாலியல் வன்கொடுமை செய்து, அதை அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பின், அதை காட்டி மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அடிக்கடி பணம் கேட்டும் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு டெய்சி மறுக்கவே வீடியோவை டெய்சியின் மகனுக்கு அனுப்பியுள்ளார்.  இதுகுறித்து டெய்சி கடந்த 5-ஆம் தேதி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது, " சுரேஷ்  எனக்கு பாலியல் வன்கொடுமை செய்ததுடன், பணமும் கேட்டு மிரட்டினார். அதற்கு மறுத்ததால் அந்த வீடியோவை எனது குடும்பத்தினருக்கு அனுப்பினார். எனவே சுரேஷ் குமார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் வாங்கிய கடனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொத்த தவணையையும் செலுத்தி விடுவதாகவும், நேரில் வந்து வாங்கிக் கொள்ளுமாறும் கூறினார். இதனால் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்றேன். அப்போது சுரேஷ்குமார், எனக்கு குளிர்பானத்தில்  மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக” புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசார் , ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த சுரேஷை நேற்று காலை கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

Ration Rice Smuggling: ரேசன் அரிசி கடத்தல்; முக்கிய புள்ளிகள் விரைவில் கைது - செயலாளர் ராதாகிருஷ்ணன்

Crime : சினிமா பாணியில் கடத்தல் நாடகம்....தாயிடம் ரூ.50 ஆயிரத்தை பறிக்க முயன்ற இளம்பெண்.. நடந்தது என்ன?

Crime: திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலி... ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!

தலைப்பு செய்திகள்

கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Embed widget