மேலும் அறிய

Crime : வீட்டிற்கு வராதே எனக் கூறியதால் ஆத்திரம்... பட்டப்பகலில் பெண்ணை கண்ட துண்டமாக வெட்டிய நபர்...

பீகாரில் 42 வயதான பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள காய்கறி சந்தையில் 42 வயதான பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நீலம் யாதவ்(42). இவர் டிசம்பர் 3-ஆம் தேதி வழக்கம் போல் காய்கறி சந்தைக்கு சென்றுள்ளார். பரபரப்பாக இருக்கும் சந்தையில், ஒருவர் காய்கறி விற்பனை செய்வதுபோல் நடித்து, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அந்த பெண்ணை கொடூரமாக வெட்டியுள்ளார். பின்பு, அவரின் தலை, முதுகு, மார்பகம், கை, கால் மற்றும் காதுகளை வெட்டிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர், வலியில் துடித்துக் கொண்டிருந்த நீலம் யாதவை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அந்த பெண்ணை வெட்டியது முகமது ஷகீல் என்பது தெரியவந்தது.


Crime : வீட்டிற்கு வராதே எனக் கூறியதால் ஆத்திரம்... பட்டப்பகலில் பெண்ணை கண்ட துண்டமாக வெட்டிய நபர்...

ஆத்திரத்தில் கொலை

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது, ”நீலம் யாதவின் கணவரும் முகமது ஷகீலும் நண்பர்களாக இருந்தனர். ஷகீலின் நடவடிக்கை சரியில்லாததால் அவரை வீட்டிற்கு வரக்கூடாது என்று, அந்த பெண்ணின் கணவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷகீல், தனது நண்பரின் மனைவி நீலம் யாதவை கடந்த சனிக்கிழமை கொன்றுள்ளார்" எனத் தெரிவித்தனர்.

அந்த பெண்ணை வெட்டிய முகமது ஷகீலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து, உயிரிழந்த பெண்ணின் கணவர் கூறியதாவது, "முகமது ஷகீல் எங்களோட வீட்டிற்கு அருகில் தான் விவசாயம் செய்து வருகிறார். இதனால் ஷகீல் தங்களது வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கமாக வைத்திருந்தார். தனது மனைவியுடன் ஷகீல்  தவறான எண்ணத்தில் பழகி வந்ததை நான் அறிந்தேன். அதனால் ஷகீலை வீட்டிற்கு வர வேண்டாம் என்று கூறியிருந்தேன். இதனால் ஆத்திரமடைந்த ஷகீல், எனது மனைவியை கொலை செய்திருக்கலாம்” என அசோக் யாதவ் கூறியுள்ளார். 

தனிப்படைகள் அமைப்பு

இந்த சம்பவம் தொடர்பாக பாகல்பூர் போலீசார், முகமது ஷகீலின்  சகோதரர் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஷகீலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பாக, டெல்லியில் நடந்த கொடூர கொலை சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

முன்னதாக, தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை காதலர் ஆப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர், அவரது உடல் பாகங்களை 35  துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினார்.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
Embed widget