Crime: மூதாட்டிகளே உஷார்... தேடி தேடி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் ராட்சசன்...!
உத்தர பிரதேசத்தில் மூதாட்டிகளை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்யும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தொடரும் வன்முறைகள்
உத்தர பிரதேச மாநிலத்தில் மூதாட்டிகளை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து வரும் சம்பவங்கள் அரகேறி வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் மூதாட்டிகள் மூன்று பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிகிறது.
அதனால் உத்தர பிரதேச போலீசார் குற்றவாளியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, ஆறு தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். அந்த குற்றவாளியின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு, இவரை பற்றி தெரிந்தால் தகவல் கொடுக்கவும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்படைகள் அமைப்பு
இதுவரை உத்தர பிரதேசத்தில் பாராபங்கி மாவட்டத்தில் 3 கொலைகள் நடந்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தவரை நீக்கி, புதிதாக வேறொரு அதிகாரியை பாராபங்கி மாவட்ட எஸ்.பி. நியமித்து உத்தரிவிட்டிருந்தார். அதன்படி, போலீசார் குற்றாவாளியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பவர் 5ஆம் தேதி அயோத்தியா மாவட்டத்தில் குஷெட்டி கிராமத்தல் மாவாய் பகுதியைச் சேர்நத 60 வயதுடைய மூதாட்டி ஒருவர் தனது வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மூதாட்டி வீட்டிற்கு வரவில்லை என அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், அயோத்தியா மாவட்டத்தில் கால்வாயில் ஓரமாக மூதாட்டியின் உடல் கிடந்துள்ளது. நிர்வாண நிலையில் கிடந்த அந்த உடலில் தலை, முகம், கால் ஆகிய பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று கடந்த வாரம் பாராபங்கி மாவட்டத்தில் 62 வயதான மூதாட்டியின் உடல் கிடப்பதாக போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. மற்றொரு சம்பவம் டிசம்பர் 30ஆம் தேதி 55 வயதுடைய மூதாட்டி இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்தது. இதனால் போலீசார் இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய குற்றவாளியை தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதிகரிக்கும் குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்துக்கு சுமார் 31 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில் இதுவே அதிமாகும். கடந்த 2014ல் 30,906 புகார்கள் மகளிர் ஆணையத்தில் பதிவாகி உள்ளது. நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் 16,876 புகார்கள் கிடைக்கப் பெற்றன. இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 3,004 புகார்கள் கிடைக்க பெற்றன. மூன்றாவது இடமாக மகாராஷ்ராவில் 1,381 புகார்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.