மேலும் அறிய

Crime: தவறை தட்டிக் கேட்ட நபர் வெட்டிக்கொலை - நெல்லையில் பயங்கரம்

கிருஷ்ணன் கோவிலை சுத்தம் செய்யும் பணி செய்து வரும் நிலையில் அக்கோவிலில் மேலச்செவலை சேர்ந்த சில இளைஞர்கள் கோவில் காம்பவுண்டு சுவரில் அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பிரான்சேரி அருகே மேலச்செவல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கிட்டுசாமி (வயது 55). இவர் அப்பகுதியில் உள்ள பழமையான நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோவில் பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கமாக கோவிலுக்கு சென்ற அவர் பணிகளை முடித்துவிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் கோவிலுக்கு திரும்பி வந்த போது கோவில் வளாகத்திலேயே சரமாரியாக வெட்டப்பட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்து உள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர்.

குறிப்பாக போலீசாரின் விசாரணையில், கிருஷ்ணன் கோவிலை சுத்தம் செய்யும் பணி செய்து வரும் நிலையில் அக்கோவிலில் மேலச்செவலை சேர்ந்த சில இளைஞர்கள் கோவில் காம்பவுண்டு சுவரில் அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். மேலும் அங்கு வரும் பொதுமக்களை அவதூறாக பேசி வந்துள்ளனர்.  இந்த நிலையில் இதனை கிருஷ்ணன் தட்டிக் கேட்டுள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என  தெரிய வந்துள்ளது.


Crime: தவறை தட்டிக் கேட்ட நபர் வெட்டிக்கொலை - நெல்லையில் பயங்கரம்

இச்சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இக்கொலையில் தொடர்புடைய கொம்பையா (19), செல்லக்குட்டி என்ற துரை (23), பால சந்துரு (23), பற்பநாதன்(19), அருண் இசக்கிபாண்டி (19), மாரியப்பன் (19) மற்றும் அய்யப்பன் (23) ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தவறை தட்டிக்கேட்ட நபரை பரிதாபமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget