மேலும் அறிய
Advertisement
Crime: குழந்தை கடத்தல் வழக்கு: தேடப்பட்டு வந்த IAS அதிகாரியின் மனைவி தற்கொலை! சிக்கிய கடிதம்
விஷ மருந்து தற்கொலை செய்து கொண்ட சூர்யா தனது சாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெயரை குறிப்பிட்டு மரண கடிதம்.
மதுரையில் குழந்தை கடத்தல் வழக்கில் 4 பேரை கைது செய்து பெண் உட்பட 2 பேரை கடந்த 10 நாட்களாக போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தேடப்பட்டு வந்த IAS அதிகாரியின் மனைவி, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளிச் சிறுவன் கடத்தல்
மதுரையில் தனியார் பள்ளியில் படித்து வரும் பள்ளி மாணவன் ஆட்டோ ஓட்டுநருடன் கடத்தப்பட்ட வழக்கில், 2 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என கேட்டு மிரட்டிய கும்பல் மீது மாணவனின் தாயார் மைதிலி ராஜலட்சுமி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கடத்தப்பட்ட பள்ளி மாணவன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் பால்பாண்டி தொலைபேசி எண்ணை வைத்து 3 மணி நேரத்தில் போலீசார் கடத்தல் கும்பல் இருப்பதை அறிந்து சென்ற நிலையில், அக்கம்பல் சிறுவனையும் ஆட்டோ ஓட்டுனரையும் செக்காணூரணி அருகே கின்னமங்கலம் பகுதியில் இறக்கி விட்டு சென்றனர்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி மனைவி தற்கொலை
தொடர்ந்து வழக்கு குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட தேனி மாவட்டம் போடியை சேர்ந்த முன்னாள் காவலர் செந்தில்குமார், திருநெல்வேலி மாவட்டம் ரகுமான் பேட்டை சேர்ந்த அப்துல் காதர், தென்காசி மாவட்டம் சிவகிரி சேர்ந்த வீரமணி காளிராஜ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி இச்சம்பவத்தில் ஐஏஎஸ் அதிகாரி ரஞ்சித் என்பவரது மனைவி சூர்யா மற்றும் ஹைகோர்ட் மகாராஜன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கடத்தல் நடைபெற்றதாகவும் இவர்களுக்கும் மைதிலி ராஜலட்சுமி என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததால் குழந்தையை கடத்த கூறியதாக குற்றவாளிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் பெயரில் காவல்துறையினர் சூர்யா மற்றும் ஹைகோர்ட் மகாராஜன் என்பவரை முக்கிய குற்றவாளியாக வழக்கில் சேர்த்து தேடி வந்தனர். இந்த நிலையில் 10 நாட்கள் ஆகியும் இருவரையும் பிடிக்க முடியாத போலீசார் நேற்று முன்தினம் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ரஞ்சித் என்பவரது மனைவி சூர்யா குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் தனது கணவர் குடியிருந்து வரும் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தின் பின்புறம் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயாருக்கு செல் போன் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தற்கொலை கடிதம்
இதனை அடுத்து உயிரிழந்த பெண்ணின் தாயார், தனது மகள் இறப்பிற்கு காரணம் மைதிலி ராஜலட்சுமி தான் என்றும் தனது மகளிடம் உள்ள சொத்தை அபகரித்து தற்போது தற்கொலைக்கு தூண்டியதாக மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் முன்பு கண்ணீர் விட்டு கதறி எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சூர்யா தனது இறப்பிற்கு முன்பு தற்கொலை கடிதம் எழுதியுள்ளார். அதில் பல்வேறு விசயங்களை தெரிவித்த நிலையில் சூர்யா, தனது சாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெயரை குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி, தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை எனக் கூறு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் இந்த வழக்கு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion