Crime: வெப்சைட்டில் தேடிய மணமகன்; பெண்ணை ஏமாற்றி 5 பவுன் செயின் அபேஸ்
பெண்ணை ஏமாற்றி ஐந்து பவுன் செயின் அபேஸ் இணையதளத்தில் தேடிய மணமகன் கைது.
கரூரில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக வெப்சைட்டில் தேடிய மணமகன் பெண்ணை நேரில் சந்தித்தபோது ஏமாற்றி ஐந்தரை பவுன் செயினை அபகரித்தார். அந்த வாலிபரை கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கரூரைச் சேர்ந்தவர் சித்ரா வயது 35 கூலித் தொழிலாளி இவர் கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் உறவினர்கள் வற்புறுத்தலின் பேரில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக மேட்ரிமோனி வெப்சைட்டில் தன்னை பற்றி பதிவிட்டு இருந்தார். அப்போது திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மனோஜ் குமார் வயது 27 என்பவர் சித்ராவிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதில் இருவரும் நன்கு பழக ஆரம்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி சித்ராவை சந்திக்க மனோஜ் குமார் கரூர் வந்துள்ளார். இருவரும் சந்தித்து பேசிவிட்டு கரூர் கோவை சாலையில் பொருட்களை பச்சை செய்வதற்காக இருவரும் வந்துள்ளனர்.
அப்போது சித்ரா கழுத்தில் கிடந்த செயினை பார்த்து நான் வந்த பிறகு அந்த செயினை கழுத்தில் எதற்கு கழட்டி பர்சில் வைத்துவிடு என மனோஜ் குமார் கூறியதைஅடுத்து அவரும் செயினை கழற்றி பர்சில் வைத்து இருவரும் அந்த காரில் வைத்து விட்டு சென்றனர். பர்சேஸ் முடித்து இருவரும் காரில் வந்த போது மனோஜ் குமார் சித்ராவை அவரது வீட்டில் இறக்கிவிட்டு ஐந்தரை பவுன் செயின் இருந்த பர்சுடன் நாமக்கல் புறப்பட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. பிறகுதான் பர்ஸில் நகை வைத்ததை அறிந்த சித்ரா இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் காவல் நிலையத்தில்புகார்அளித்தார். புகார் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொத்தடிமைகளாக வேலை பார்த்த 14 பேர் மீட்பு
கிருஷ்ணராயபுரம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 14 பேர் மீட்பு இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல் சூளையில் சோதனை சத்தீஸ்கர் மாநிலம் நாரணபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மற்றும் 14 வயதுடைய 3 சிறுமிகள் நான்கு ஆண்கள் 7 பெண்கள் உட்பட 14 பேர் கிருஷ்ணராயபுரம் அருகே வீரராக்கியத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணியாற்றி வந்தனர். இதில் மூன்று சிறுமிகளை காணவில்லை என அந்த நாரணபுரி மாவட்ட போலீசாரிடம் அவர்களது பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த மாவட்ட போலீசார் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பார்த்ததில் கரூர் மாவட்டத்தில் மூன்று சிறுமிகள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் பெயரில் கரூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் சத்தீஸ்கர் மாநில சமூக நலத்துறை அதிகாரிகள் மாயனூர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் வீரராக்கியத்தில் உள்ள செங்கல் சூலையில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது செங்கல் சூளையில் நாரணபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் கொத்தடிமைகளாக வேலை பார்த்தது தெரிய வந்தது. இது குறித்து தெற்கு ரங்கநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் புகார் கொடுத்தார்.
இதை எடுத்து அந்த குழுவினர் மூன்று சிறுமிகளையும் மீட்டனர் அப்போது மற்ற 11 பேரும் எங்களுக்கு வார அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் சுதந்திரமாக வெளியில் சென்று வர வேண்டும் போன்ற விருப்பத்திற்கு முரண்பாடாக எங்களையும் கொத்தடிமைகளாக பணிபுரிய வைத்துள்ளனர் அதனால் எங்களையும் மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதை அடுத்து அவர்களையும் போலீசார் மீட்டனர் இந்த சோதனையில் மூன்று சிறுமிகள் உட்பட 14 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்த்தபோது மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை அடுத்து 14 பேரை கொத்தடிமைகளாக வேலை பார்க்க வைத்து தொடர்பாக கிருஷ்ணராயபுரம் பூஞ்சோலை புதூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்கின்ற பாண்டியன் வயது 57 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் தேவா என்கின்ற தேவேந்திர குமார் வயது 40 ஆகிய இரண்டு பேரையும் மாயனூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் இரண்டு பேரும் கிருஷ்ணராயபுரம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.