மேலும் அறிய

Crime: தாயை அடித்து கொன்று கிணற்றில் வீசிய மகன் - விழுப்புரத்தில் அதிர்ச்சி

சக்திவேல் அழுதபடி காணப்பட்டார். அவரிடம் கிராம மக்கள் விசாரித்த போது, தனது தாயை கொன்று விட்டதாக தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவருக்கு திருமணமாகி  4 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இவர் தனது மனைவி குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார்.

இவரது தாய் அசோதை (70). இவர் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு சக்திவேல் தனது தாய் அசோதையிடம் சென்று செலவுக்கு பணம் கேட்டார். அதோடு ரேசன் கார்டையும் கேட்டு நச்சரித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் 2 பேரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இன்று காலை திடீரென எழுந்த சக்திவேல் நேராக தனது தாய் அசோதையிடம் சென்று பணம் கேட்டார். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் தனது தாய் என்று கூட பாராமல் அசோதையை கொடூரமாக தாக்கினார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து மயக்கம் அடைந்தார். அதிர்ச்சி அடைந்த சக்திவேல் தனது தாய் இறந்து விட்டார் என கருதி அருகில் உள்ள தோட்டத்துக்கு தூக்கி சென்றார். அங்குள்ள உறைகிணற்றில் வீசி சேலையால் அதனை மூடினார். நீண்ட நேரம் ஆகியும் தாய்-மகனை காணாததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே அவர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்த போது சக்திவேல் அங்கு இருந்தார். அவர் அழுதபடி காணப்பட்டார். அவரிடம் கிராம மக்கள் விசாரித்த போது, தனது தாயை கொன்று விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிணற்றில் வீசப்பட்ட அசோதையின் உடலை மீட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். பெற்ற தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!

TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு

'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!

Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

ABP Premium

வீடியோ

Tirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்TVK Vijay Meeting: பனையூரில் குவியும் தொண்டர்கள்..100 மா.செ-க்கள் ரெடி! புயலை கிளப்பும் விஜய்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?

NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!

Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்

Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!

Embed widget