அதிகாரிகளுக்கு பயந்து ஓடிய மூதாட்டி...பேருந்து சக்கரத்தில் தலை நசுங்கி உயிரிழப்பு.. சென்னையில் பயங்கரம்!
பாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவதை கண்டு பயந்து ஓடிய பெண் வியாபாரி, பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
Crime: பாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவதை கண்டு பயந்து ஓடிய பெண் வியாபாரி, பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள்:
சென்னை எஸ்.சி. போஸ் சாலையில் நடைபாதையை செய்து சிறு வியாபாரிகள் கடைகள் நடத்தி வருவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று மாலை நடைபாதையை ஆக்கிரமித்து கடை நடத்துபவர்களை அப்புறப்படுத்தி வந்தனர். அங்கு, காஞ்சிபுரம் மாவட்டம் காவலூர் பகுதியைச் சேர்ந்த கவுரி (60) என்ற மூதாட்டியும் அங்கு சாலை ஓரத்தில் பழ வியாபாரம் செய்து வந்தார்.
தலை நசுங்கி உயிரிழந்த மூதாட்டி:
மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதை கடைகளை அகற்றுவதை கண்ட கவுரி, பயந்துபோய் அங்கிருந்து ஓடினார். அப்போது வண்டலூரில் இருந்து கொருக்குப் பேட்டை நோக்கி வந்த மாநகர பேருந்து மூதாட்டி கவுரி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பேருந்தின் முன்சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி கவுரி, தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் சதீஷ் (34), நடத்துனர் வேல்முருகன் (42) ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர். பாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவதை கண்டு பயந்து ஓடிய பெண் வியாபாரி, பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க
Crime: திருமணம் மீறிய உறவு...நேரில் கண்ட மகன்...கொடூரமாக கொலை செய்த தாய்...சிக்கியது எப்படி?