Crime : பதறவைத்த கொடூரம்...பணத்திற்காக ஆய்வு மாணவரை 3 துண்டுகளாக உடலை வெட்டிய நபர்...லக்னோவில் அதிர்ச்சி...
லக்னோவில் பணத்திற்காக பிஎச்டி படிக்கும் ஒருவரை 3 தூண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime : லக்னோவில் பணத்திற்காக பிஎச்டி படிக்கும் ஒருவரை 3 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் அங்கித் கோக்கரன் (40). பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வருகிறார். இவரது பெற்றோர்கள் கடந்த ஆண்டு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. காசிபாத் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டு உரிமையாளரான உமேஷ் சர்மாவிடம் நட்பாக பழகி வந்தார்.
அங்கித் கோக்கரன் அனைத்து விஷயத்தையும் வீட்டு உரிமையாளராக உமேஷ் சர்மாவிடம் கூறுவார். அப்போது அங்கித் கோக்கரன் தனது பெற்றோர் சொத்தை விற்க முடிவு செய்தார். அப்போது உமேஷ் சர்மாவிடம் தனது நிலத்தை வாங்கும்மாறு கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, உமேஷ் சர்மாவிடம் போதுமான அளவுக்கு பணம் இல்லாத காரணத்தால் அதனை வாங்க மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. பிறகு, கடந்த அக்டோபர் மாதம் அங்கித் கோக்கரன் தனது பெற்றோர் நிலத்தை ரூபாய் 1 கோடிக்கு அதே பகுதியில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
மூன்று துண்டுகளாக வெட்டிக் கொலை
இது குறித்து வீட்டு உரிமையாளரான உமேஷ் சர்மாவிடம் தெரிவித்தார். இதற்கு பின்பு, அங்கித் கோக்கரனை பின் தொடர்வது, அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்வதும் வழக்கமாக வைத்திருந்தார் உமேஷ் சர்மா. பிறகு அவரை கொலை செய்து பணத்தை பறிக்க திட்டமிட்டிருந்தார். அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி அவரது வீட்டிற்கு உமேஷ் சென்றார். அவருடன் நட்பாக பழகினார். பின்பு, அன்றிரவு அங்கித் கோக்கரனை கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்தார். பின்பு கொலை செய்தது வெளியே தெரியாமல் இருக்க அவரது உடல்களை ரம்பத்தால் மூன்று துண்டுகளாக வெட்டி உள்ளார்.
பின்பு, அவரது உடலை அப்புறப்படுத்த அவரது நண்பரான பிரவேஷ் குமார் சர்மாவை வீட்டிற்கு அழைத்தார். பின்பு உயிரிழந்த அவரது உடலை தலை, கை, கால் என மூன்று துண்டாக வெட்டியதாக கூறப்படுகிறது. ஒரு பிளாஸ்டிக் பையில் 3 உடல் பாகங்களை தனிதனியாக வைத்து, 3 வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளார். அன்று நள்ளிரவே காரில் 3 உடல் பாகங்களை எடுத்து சென்றுள்ளார்.
பணத்திற்காக கொலை
இரண்டு உடல் பாகங்களை மீரட் மாவட்டத்தில் உள்ள கட்டௌலி கால்வாயிலும் மற்றும் காஜியாபாத்தில் உள்ள முராத்நகரில் உள்ள கால்வாயில் ஒரு உடல் பாகங்களையும் வீசியுள்ளதாக கூறப்படுகிறது. அங்கித் கோக்கரின் எடிஎம்-ஐ பயன்படுத்தி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 20 லட்சத்தை எடுத்துள்ளார். பின்னர், கோக்கரின் ஏடிஎம் கார்டை தனது நண்பரான பிரவேஷிடம் கொடுத்து, மேலும் பணத்தை எடுக்கச் சொன்னதாக கூறியதாக தெரிகிறது. பின்பு கோக்கரின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுத்த பிறகு அவரது செல்போனை கால்வாயில் வீசியுள்ளதாக கூறப்படுகிறது.
கைது
இதனை தொடர்ந்து, கோக்கரின் நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டனர். அவர் பதலளிக்காததாலும், அவர் கல்லூரிக்கு வராததை அறிந்த அவரது நண்பர்கள் காசிபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது காசியாபாத் அருகே அடையாளம் தெரியாத உடல் கிடப்பதாக தகவல் வந்தது. இதனால் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில் கோக்கரின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. பிறகு, தொடர்ந்து விசாரணை செய்ததில் உமேஷ் சர்மா மற்றும் அவரது நண்பரான பிரவேஷை கைது செய்தனர்.