Crime Pocso : பேத்திக்கும் தாத்தாவுக்கும் திருமண ஏற்பாடு.. சித்தப்பாவால் வன்கொடுமை.. மதுரையில் கொடூரம்..
மதுரையில் 16 வயது சிறுமியை அவரது சித்தப்பாவிற்கு திருமணம் செய்ய வைக்க முயன்றதாக அவரது தாய், தாத்தா, சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளனர்.
Crime : மதுரையில் 16 வயது சிறுமியை அவரது சித்தப்பாவிற்கு திருமணம் செய்ய வைக்க முயன்றதாக அவரது தாய், தாத்தா, சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமிக்கு கட்டாய திருமணம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் கூடக்கோவில் சாலையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் ஒருவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். முதியவரின் மகன் கடந்த சில ஒரு மாதங்களுக்கு சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டார். ஆண் வாரிசு இல்லாத முதியவருக்கு ஏற்கனேவே மனைவி இறந்துவிட்டதால் தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று முடிவு செய்தார். ஆண் வாரிசுக்காக தனக்கு வேறொரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என தனது மூத்த மகளிடம் தெரிவித்தார்.
அதற்கு மூத்த மகளும் வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கு பதிலாக தனது 16 வயது மகளை திருமணம் செய்து கொள்ளலாம் என தனது தந்தையிடம் கூறினார். இதற்கு அந்த முதியவரும் சம்மதம் தெரிவித்தார். பின்னர், திருமணம் குறித்து உறவினர்களிடம் பேசி அவர்களிடமும் சம்மதம் பெறும் முயற்சியில் சிறுமியின் தாத்தாவும், தாயும் ஈடுபட்டனர்.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
தனது சொந்த தாத்தாவுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி நடத்தப்பதை அறிந்த அந்த சிறுமி தனது சித்தாப்பாவிடம் இது பற்றி கூறி உதவி கோரியுள்ளார். அதற்கு அவரது சித்தப்பா பயப்பட வேண்டாம், திருமணத்தை நிறுத்த நான் முயற்சி செய்கிறேன் என்று கூறியுள்ளார். பின்னர், சிறுமியிடம் திருமணத்தை நிறுத்துவது குறித்து பேசுவதாக கூறி பலமுறை அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, ஒரு நாள் சிறுமியும், அவரது சித்தப்பாவும் தோட்டத்தில் தனிமையில் இருந்தததை அவரது தாய் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவரிடன் கேட்டபோது, இந்த விஷயம் வெளியில் தெரியவேண்டாம். உனக்கு ஒன்றரை லட்சம் பணம் தருகிறேன். சிறுமியை எனக்கு திருமணம் செய்து வைத்துவிடுங்கள். உங்களுக்கு ஆண் வாரிசு தானே வேண்டும். நானே பெற்று தருகிறேன் என்று சித்தப்பா கூறியுள்ளதாக தெரிகிறது.
நாடகமாடிய தாய்
இதற்கு அந்த சிறுமியின் தாயும் சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு சிறுமியின் தாத்தாவும் ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து, இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் அவர்கள் இருவரை வெளியூருக்கு சென்று திருமணம் செய்து கொள்ளுங்கள் என சிறுமியின் தாய், சித்தாப்பாவிடம் கூறியுள்ளார்.
மேலும், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க சிறுமி காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, ஒன்றரை லட்சம் பணத்தை பெற்றுக் கொண்ட தாய், தனது மகளுக்கு, அவரது சித்தாப்பாவுடன் திருமணம் செய்து வைத்தார். பின்னர், காவல்நிலையத்தில் சிறுமி காணாமல் போனதாக புகாரும் அளித்தார்.
புகாரின்படி விசாரணை செய்த போலீசார், சிறுமிக்கு திருமணம் செய்து வைத்து காணாமல் போனதாக நாடகமாடியது தெரியவந்தது. இதனை அடுத்து, சிறுமியின் தாய், தாத்தா மற்றும் சிறுமியை திருமணம் செய்த சித்தப்பா ஆகியோர் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.