Crime : துணி துவைப்பதில் தகராறு.... காயமடைந்த ராணுவ வீரர் உயிரிழந்த சோகம்... திமுக கவுன்சிலர் உட்பட 9 பேர் கைது...!
கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மாதையன். இவருக்கு பிரபாகரன் (33) மற்றும் பிரவு (28) என இருமகன்கள் உள்ளனர். இருவருமே ராணுவத்தில் பணியாற்றி வந்தனர். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி தெருவில் உள்ள பொதுகுழாய் அருகே பிரபாகரன் துணி துவைத்து கொண்டிருந்தார்.
இருதரப்பு மோதல்
அப்போது, அந்த வழியாக வந்த நாஹோகனஹள்ளி பேரூராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் சின்னசாமி (55), "இந்த இடத்தில் துணி துவைக்க கூடாது. இது பொதுக் குழாய் என்று கூறி, பிரபாகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு வந்த பிரபுவிடமும் வாக்குவாதம் செய்தனர்.
இதனால் அங்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து, அன்று இரவே இருதரப்புக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அங்கு வந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி அவருடன் வந்த எட்டு பேரும் பிரபு, பிரபாகரன் அவர்களுக்கு ஆதரவாக வந்த தேவராஜ், மாதையன் ஆகியோரை கடுமையாக தாக்கினர்.
உயிரிழப்பு
இதில் படுகாயமடைந்த நான்கு பேரும் ஓசூர் தனியார் மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராணுவ வீரர் பிரபு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, அப்பகுதி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து திமுக கவுன்சிலர் சின்னசாமி, அவர் உறவினர்களான குருசூரியமூர்த்தி, மணிகண்டன், ராஜபாண்டி, குணாநிதி உட்பட மொத்தம் ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
துணிதுவைப்பதில் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் உயிரிழந்தது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாமலை கண்டனம்
இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது, "கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, 29 வயதே ஆன ராணுவ வீரர் பிரபு, திமுக பேரூராட்சி கவுன்சிலர் ஒருவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து, அதிர்ச்சியும் கோபமும் அடைந்தேன்.
ராணுவ வீரர்களுக்கு, திமுகவினர் அராஜகத்தால், சொந்த ஊரிலேயே பாதுகாப்பில்லை. தங்கள் உயிரையும் துச்சமென கருதி எல்லையில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களையும், அவர்கள் குடும்பத்தினரை மிரட்டுவதும், அவர்கள் மேல் தாக்குதல் நடத்துவதும், தற்போது கொலையே செய்யும் அளவுக்கு, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் உருமாறியுள்ளது” என்றார்.
தங்கள் உயிரையும் துச்சமென கருதி எல்லையில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களையும், அவர்கள் குடும்பத்தினரை மிரட்டுவதும், அவர்கள் மேல் தாக்குதல் நடத்துவதும், தற்போது கொலையே செய்யும் அளவுக்கு, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் உருமாறியுள்ளது. (2/4)
— K.Annamalai (@annamalai_k) February 15, 2023
மேலும், காவல்துறையை கையில் வைத்திருக்கும் சட்டம் ஒழுங்கு எப்படி போனால் எனக்கென்ன என்று இருப்பதை, பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உடனடியாக கொலையாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மேலும் இது போன்ற சமூக விரோதச் செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டுமென” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
"அரசியல் பிரச்சனை எதுவும் இல்லை"
இதனை அடுத்து இவ்விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ராணுவ வீரர் கொலை சம்பவத்தில் அரசியல் பிரச்சனைகள் எதுவும் இல்லை. சம்பவத்தில் அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், மோதிக்கொண்ட இருதரப்பினரும் நெருங்கிய உறவினர்கள். இதனால் இந்த பிரச்சனையை அரசியல் பிரச்சனையாக பார்க்க வேண்டாம். கொலை வழக்கை அரசியல் கண்ணோட்டதோடு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் தெரிவித்துள்ளார்.





















