Crime Against Woman: ஆட்டோவில் சென்ற பெண்ணை வெளியே இழுத்து பாலியல் குற்றம்.. வீடியோ வெளியிட்டு கொடூரம்..
உத்தரபிரதேசத்தில் ஆட்டோவில் சென்ற இளம்பெண் ஒருவரை வெளியே இழுத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஆட்டோவில் சென்ற இளம்பெண் ஒருவரை வெளியே இழுத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் இளம் வயது பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி தனது அத்தையுடன் தானேபூர் பகுதியில் இருந்து அருகில் உள்ள கிராமத்திற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த ஆட்டோவை வழிமறித்த அடையாளம் தெரியாத நால்வர், ஆட்டோவில் இருந்த இளம் பெண்ணை வெளியே இழுத்து, புதருக்குள் இழுத்து சென்று, அவரது ஆடைகளை கிழித்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.
அதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணை அருகில் உள்ள செங்கல் சூளைக்கு இழுத்து சென்று துன்புறுத்தி வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோவை அவர்கள் சோஷியல் மீடியாவில் வெளியிட்டதால் அந்த வீடியோ பலமுறை பகிரப்பட்டும்விட்டது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் அத்தை தானேபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப்புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த விசாரணையில் சம்பவம் நடந்த அன்றைய தினம் பாதிக்கப்பட்ட பெண் அருகில் உள்ள கிராமத்தில் வசித்த நோய்வாய்ப்பட்ட தனது எஉறவினரைப் பார்க்க சென்றது தெரியவந்தது. குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.