மேலும் அறிய

Crime: பிடித்ததையெல்லாம் வாங்கி கொடுத்து மகளைக்கொன்ற தந்தை...சாதி வெறியால் கர்நாடகாவில் நேர்ந்த கொடூரம்

Crime: கர்நாடகாவில் வேறு ஜாதி இளைஞரை காதலித்து வந்த தனது மகளை நீரில் மூழ்கியடித்து தந்தையை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: கர்நாடகாவில் வேறு ஜாதி இளைஞரை காதலித்து வந்த தனது மகளை நீரில் முக்கி எடுத்து தந்தையை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள குடத்தினி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்கார் கவுடா(52). இவரது மனைவி சீதா. இவர்களுக்கு சுஹாசினி என்ற மகள் உள்ளார். இவர் அதை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். ஒரே மகள் என்பதால் அவரது தந்தை ஓம்கார் கவுடா அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார்.

இந்நிலையில், சுஹாசினி, தனது கல்லூரியில் படித்த வேறு ஜாதி இளைஞரை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி வெளியே செல்வது வழக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே இருவரும் காதலித்து வந்தது அவரது வீட்டிற்கு தெரியவந்தது. இந்த விஷயத்தை அறிந்த தந்தை ஓம்கார் கவுடா, மகளை கண்டித்துள்ளார். ”வேறு ஜாதியை சேர்ந்த நபரை நமது உறவினர்கள் ஏற்க மாட்டார்கள்; எனவே இந்த காதல் வேண்டாம். அந்த நபரிடம் பேசுவதை நிறுத்திவிடு” என்று கூறியுள்ளார்.

ஆனால் சுஹாசினி அந்த இளைஞருடனான காதலை விடவில்லை எனக் கூறப்படுகிறது. தந்தை அறிவுரை கூறியும் சுஹாசினி காதலில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. மகளிடம் இவ்வளவு சொல்லியும் அவர் கேட்காததால், ஓம்கார் கவுடா ஆத்திரம் அடைந்தார். இனியும் விட்டால் தனது மகள் அந்த நபரை திருமணம் செய்துவிடுவார் என்ற நோக்கத்தில் கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி, கல்லூரிக்கு வழக்கம் போல் சென்ற மகளை, திரைப்படம் பார்க்கலாம் என்று கூறி தியேட்டருக்கு அழைத்து சென்றார். தந்தை படத்துக்கு அழைத்ததால் சுஹாசினி மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர்கள் தியேட்டருக்கு செல்வதற்கு முன்பே படம் திரையிடப்பட்டது. இதனால் அவர்கள் பக்கத்தில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு மகளுக்கு படிக்க தேவையான பொருட்களை எல்லாம் ஓம்கார் கவுடா வாங்கித் தந்துள்ளார். பின்பு நகை கடைக்கு அழைத்து சென்று தங்க மோதிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். 

இதன் தொடர்ச்சியாக அருகில் இருக்கும் ஒரு ஏரிக்கு மகளை, ஓம்கார் கவுடா அழைத்து சென்றார். அப்போது, மகளை திடீரென நீரில் தள்ளினார். சுஹாசினி தண்ணீரில் மூழ்கி திணறியுள்ளார். இதனை பார்க்க முடியாத ஓம்கார் கவுடா அந்த இடத்தைவிட்டு சென்றுள்ளார். பின்பு அவரது தாய் சீதா மகள் காணவில்லை என பெல்லாரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பெல்லாரி போலீசார் விசாரணை செய்தனர். அதன்படி, தந்தை ஓம்கார் கவுடாவை கைது செய்தனர். வேறு ஜாதி நபரை காதலிக்க வேண்டாம் என பலமுறை கூறியும் கேட்காததால் மகளை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். பின்பு உயிரிழந்த சுஹாசினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்தவமனைக்கு கொண்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க

Chennai: சென்னையில் போலி வங்கிகள்.. தனி ராஜ்ஜியம் நடத்திய இளைஞர்.. சிக்கும் முக்கியப் புள்ளிகள் : பரபர பின்னணி!!

ஸ்டாலின் ரூட்டை எடுக்கும் கேரளா... ஆளுநரின் அதிகாரங்களை குறைக்க திட்டம்... அதிரடி காட்டும் பினராயி...!

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget