Crime : காதலும் கட்டாய மதமாற்றமும்...? 17 வயது சிறுமி செய்த விபரீத செயல்... நடந்தது என்ன?
Crime : லக்னோவில் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக 17 வயது சிறுமி வீட்டின் மாடியில் ‘இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
Crime : லக்னோவில் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக 17 வயது சிறுமி வீட்டின் மாடியில் ‘இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
லக்னோ துடா காலனியில் 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வந்திருந்தார். இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், தினமும் பள்ளி செல்லும்போது ஒருவர் பின் தொடர்வதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், அந்த சிறுமி, ஒரு நாள் பள்ளி சென்று வீடு திரும்பிய போது, அந்த நபர் சிறுமியை திருமணம் செய்ய வேண்டும் எனவும் மதம் மாற வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சிறுமியை இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாற வேண்டும் என அந்த நபர் தினமும் கட்டாயப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி மன உளைச்சலுக்கு ஆளாகினார். இதனால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் சிறிது நாட்கள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சில நாட்களாகவே வீட்டிலும் சோர்வுடனும் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோர் கேட்ட போது, எல்லாவற்றையும் அந்த சிறுமி கூறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அந்த சிறுமி ஒரு நாள் பள்ளி முடிந்து வீடு திரும்பினார். மன உளைச்சலில் இருந்த சிறுமி, வீட்டின் மாடிற்கு சென்று குதித்துள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர், அந்த சிறுமியை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அந்த சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்பு, காயமடைந்த அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துது. இந்நிலையில் அந்த சிறுமி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, மாவட்ட காவல்துறையில் பெற்றோர் புகார் அளித்தனர். அதில், சுபியான் என்ற ஒரு நபர் தனது மகளை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக அந்த சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமான வீடியோ தன்னிடம் இருப்பதாக உயிரிழந்த சிறுமியின் தாய் போலீசாரிடம் கூறியுள்ளார். மேலும், சுபியான் என்ற நபர் தனது மகளை இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாற சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள சுபியான் என்ற நபரை தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க