Crime: ஆந்திராவில் கணவனின் ஆணுறுப்பை பிளேடால் அறுத்த மனைவி; காரணம் என்னனு தெரியுமா?
ஆந்திராவின் என்டிஆர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவர் தனது முதல் மனைவியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களைப் பார்த்ததற்காக அவரின் ஆணுறுப்பை பிளேடால் அறுத்துள்ளார்.
ஆந்திராவின் என்டிஆர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவர் தனது முதல் மனைவியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களைப் பார்த்ததற்காக அவரின் ஆணுறுப்பை பிளேடால் அறுத்துள்ளார்.
இந்த வினோதமான சம்பவம் நந்திகமவில் உள்ள ஐயப்பா நகரில் நடந்துள்ளது. சந்தர்லபாடு மண்டல் முப்பல்லா கிராமத்தைச் சேர்ந்த கோட்டா ஆனந்த் பாபு என்பவர், கருத்து வேறுபாடாக காரணமாக தனது முதல் மனைவியை 5 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துள்ளார்.
அதன் பின்னர் வரம்மா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதற்குப் பின்னர் ஐந்து மாதங்களுக்கு முன், முப்பள்ளாவில் வசிக்க குடியேறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை, அதாவது ஜூலை 21ஆம் தேதி கோட்டா ஆனந்த் பாபு தனது முதல் மனைவியின் இன்ஸ்டாகிராம் ரீல்களை மிகவும் ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். இதனைப் பார்த்த இரண்டாவது மனைவி வரம்மாவிற்கு கோபம் வரவே இது குறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல் வாக்கு வாதம் பெரும் சண்டையாக மாறியுள்ளது. ஆனாலும் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற இரண்டாவது மனைவி வரம்மா கோட்டா ஆனந்த் பாபுவின் ஆண் உறுப்பை பிளேடால் அறுத்துள்ளார். இதனால் வலி தாங்கமுடியாமல் அலறியுள்ளார் கோட்டா ஆனந்த் பாபு. அதிகமாக வந்த அலறல் சத்தத்தைக் கேட்டு மிகவும் பதறிப்போன அக்கம் பக்கத்தினர் கோட்டா ஆனந்த் பாபு மற்றும் வரம்மா வசித்து வந்த வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது கோட்டா ஆனந்த் பாபு ஆண் உறுப்பு துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக்கொண்டு இருந்துள்ளார்.
உடனே அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டார். இந்த விவகாரத்தில் போலீசார் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஆந்திராவில் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் பேசு பொருளாகியுள்ளது.