Crime: பெண்ணின் புகைப்படங்களை வைத்து ப்ளாக்மெயில் செய்த சென்னை இளைஞர்.. அடுத்து நடந்த அதிரடி தெரியுமா?
Crime: சென்னையில் 19 வயது இளம் பெண்ணின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Crime: சென்னையில் 19 வயது இளம் பெண்ணின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை துரைப்பாக்கம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்த கௌதம் (21). இவர் பள்ளி வயதில் இருந்தே ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் காதலித்து வந்த பெண்ணும் இருவரும் பள்ளியில் இருந்தே நெருக்கமாக பழங்கி வந்தனர். கௌதமின் பழக்க வழக்கங்கள் சரியால்லாததை அறிந்த அந்த பெண், பள்ளி படிப்பு முடிந்தவுடன் கௌதமிடம் பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
பின்பு அந்த பெண் பள்ளி படிப்பை முடித்துவிட்டு தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்திருந்தார். ஒரு நாள் அந்த பெண் படிக்கும் கல்லூரிக்கு சென்று பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தன்னுடம் பேசுமாறு அந்த பெண்ணை கௌதம் கட்டாயப்படுத்தியாகவும், தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து அந்த பெண், ஒரு நாள் நேரில் சந்தித்து அந்த நபரிடம் பேச விருப்பமில்லை என தெரிவித்தார். தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என கோபமாக அந்த பெண் பேசியுள்ளார். பிறகு ஆத்திரமடைந்த கௌதம், அந்த பெண்ணை தாக்கியதாகவும், தன்னிடம் பேசவில்லை என்றால் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவேன் எனவும் மிரட்டல் விடுத்திருந்தாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், பெற்றோருக்கு தெரிவித்தார். இது குறித்து துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வந்திருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கௌதம் (21) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் தற்கொலை கூட செய்கின்றனர். இந்த நவீன காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது இதுவே ஒரு சான்றாக உள்ளது. சமீபத்தில் கூட இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. சமூக வலைதளத்தில் ஒரு ஆப் மூலம் பெண்களிடம் பழகி அவர்களிடம் அந்தரங்க படங்களை வாங்கி மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்பு கைதான விருதுநகர் பகுதியைச் சேர்ந்த பரமசிவத்திடம் விசாரணை நடத்தினர் . அப்போது, ஆன்லைன் ஆப் மூலம் பல பெண்களிடம் பழகியது தெரியவந்தது. அழகான தோற்றம் கொண்ட ஆண்களை தான் என்பது போல் சமூக வலைதளங்களில் ப்ரொபைல் போட்டோவாக வைத்து பல பெண்களை நம்ப வைத்து அவர்களுடைய அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று இணையத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.