மேலும் அறிய

Crime: கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடந்த புதுமணத் தம்பதி... திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சோகம்...!

சத்தீஷ்கரில் புதுமணத் தம்பதி திருமண வரவேற்புக்கு முன்பாக வீட்டின் அறையில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : சத்தீஷ்கரில் புதுமணத் தம்பதி, திருமண வரவேற்புக்கு முன்பாக வீட்டு அறையில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிரிஜ் நகரைச் சேர்ந்தவர் அஸ்லம்(24). இவருக்கு கஹ்காஷா பானு (22) என்பவருடன் கடந்த சனிக்கிழமை திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெறுவதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துக் கொண்டிருந்தது.  புதுமணத் தம்பதி தங்களது அறையில் தயாராகிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த அறையில் இருந்து மணப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு மணமகனின் தாய் ஓடிச் சென்றார்.  அறையின் உள்புறம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த அந்த கதவை தட்டினார். கதவு திறக்கப்படாததால் அவரும் மற்றவர்களும் அறை ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது அறைக்குள் மணப்பெண்ணும், மணமகனும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

உடனே இது பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த அறைக்கதவை உடைத்து பார்த்த போது இருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடம்பில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, புதுமண தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் கத்தியையும் போலீசார் கைப்பற்றினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ”கணவன் மனைவிக்குள் ஏதேனும் வாக்குவாதம் நடத்திருக்கலாம். அதில் அஸ்லம், மனைவி கஹ்காஷா பானுவைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முழு விசாரணைக்கு பிறகே உண்மை வெளிவரும்" என்று கூறப்படுகிறது. புதுமணத் தம்பதி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு சம்பவம்

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். அதே பகுதியைச் சேர்ந்த ரச்சனா என்ற பெண்ணை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இவர்கள் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. அப்படிதான் ஒரு நாள் அதாவது டிசம்பர் 25-ம் தேதி இரவு சந்தித்தனர். அவர்கள் காசியாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்தனர். சுமார் அரை மணி நேரம் கழித்து தான் புறப்படுவதாக கௌதமிடம், ரச்சனா கூறினார்.

இதற்கு கௌதம் தன்னுடம் இரவு தங்க வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கு அந்த இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில் ரச்சனாவை, கௌதம் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பிறகு தன்னுடன் தங்க மறுத்த ஆத்திரத்தில் ரச்சனாவை, கௌதம் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். பின்பு அவரை போலீசார் கைது செய்தனர். 


மேலும் படிக்க

“கன்னத்தில் அறைந்ததால் கோபம் வந்துவிட்டது” - கணவரை 7 முறை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி!

Crime: தூத்துக்குடியில் பயங்கரம்; ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் வெட்டிக் கொலை - தொடரும் பழிக்கு பழி கொலைகள்

தலைப்பு செய்திகள்

மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget