Crime: வாக்குமூலம் அளிக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்! நீதிபதி செய்த கொடூரம் - திரிபுரா நீதிமன்றத்தில் அதிர்ச்சி!
வாக்குமூலம் அளித்த பெண்ணிடம் குற்றவியல் நீதிபதி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
Crime: வாக்குமூலம் அளித்த பெண்ணிடம் குற்றவியல் நீதிபதி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
திரிபுரா நீதிமன்றத்தில் பரபரப்பு:
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், தற்போது திரிபுராவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திரிபுராவில் தலாய் மாவட்டத்தில் வசித்து வரும் 23 வயதான பெண் ஒருவரை கடந்த 13ஆம் தேதி வீடு புகுந்து மிரட்டி 26 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து புகாரை அளித்ததை தொடர்ந்து, கடந்த 16ஆம் தேதி மாஜிஸ்திரேட் மூலம் வாக்குமூலம் அளிக்க வரும்படி அந்த பெண்ணிடம் கூறியுள்ளது
கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி திரிபுராவின் கமால்பூர் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்ற அறைக்கு வாக்குமூலம் அளிக்க சென்ற பெண்ணை குற்றவியல் நடுவர் (மாஜிஸ்திரேட்) பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்தார்.
வாக்குமூலம் அளிக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு:
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், "பிப்ரவரி 16ஆம் தேதி எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட்டின் அறைக்குச் சென்றேன். பெண் போலீசாரை அறைக்கு வெளியே இருக்கும்படி நீதிபதி கூறினார். இதன்பின் கதவை முடிய நீதிபதி எனக்கு என்ன நடந்தது என்று கூறும்படி கேட்டார்.
நான் வாக்குமூலம் அளித்தேன். அப்போது, மாஜிஸ்திரேட் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். நான் அவரது அறையை விட்டு வெளியே விரைந்து வந்து வழக்கறிஞர்கள் மற்றும் எனது கணவருக்கு சம்பவம் குறித்து தெரிவித்தேன்" என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கணவர், கமல்பூர் பார் அசோசியேஷனில் தனியாக புகார் அளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், நீதிபதி கவுதம் சர்க்கார் தலைமையில் மூன்று பேர் குழு விசாரணை நடத்தி வருகிறது.
மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு நீதிமன்ற வளாகத்தில் கமால்பூர் பார் அசோசியேஷன் உறுப்பினர்களை சந்தித்து, பெண்ணின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருகிறோம் என்று கூறினர். நீதி வழங்க வேண்டிய குற்றவியல் நீதிபதியே பாலியல் தொந்தரவு செய்ததாக 23 வயது பெண் புகார் அளித்தது திரிபுராவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Crime: கர்ப்பிணிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! தீ வைத்து எரித்த கொடூர கும்பல் - நடந்தது என்ன?