Crime : போதையில் காதலனை துப்பாக்கியால் சுட்ட மாடல்.. நிர்வாணமாக தப்பி ஓட்டம்...என்ன நடந்தது?
Crime : பிரேசிலில் மாடல் அழகி ஒருவர் தனது காதலனை போதையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Crime : பிரேசிலில் மாடல் அழகி ஒருவர் தனது காதலனை போதையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிரேசில் நாட்டில் போதை உச்சத்துக்கு ஏறிய நிலையில் காதலனை சுட்ட மாடல் அழகி, நிர்வாணமாக தப்பி ஓடினார் என போலீசார் தெரிவித்தனர். தென் அமெரிக்க நாடான பிரேசிலைச் சேர்ந்த மார்செல்லா எலன் (31). இவர் 'மாட லிங்' செய்து வருகிறார். இவர், தொழிலதிபரான ஜோர்டான் லோம்பார்டி (40) என்பவரை காதலித்தார். மாடலிங் செய்து விட்டு நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்திருந்தனர்.
சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் பிரேசிலியா நகரில் உள்ள தேவாலயத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்ய, இவர்கள் சமீபத்தில் பிரேசிலியா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கினர்.
அங்கு, இருவரும் மது அருந்தி, கஞ்சா புகைத்து உச்சகட்ட போதையை அடைந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில் ஒருவரைக்கொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்பு, ஆத்திரம் அடைந்த மார்செல்லா, துப்பாக்கியை எடுத்து லோம்பார்டியின் கழுத்தில் சுட்டார். பின், தான் நிர்வாணமாக இருக்கிறோம் என்பதைக் கூட அறியாமல், காரை கிளப்பி, ஹோட்டலின் பிரதான கதவுகளை இடித்து தள்ளி தப்பினார். அங்கு இருக்கும் ஹோட்டல் ஊழியர்கள் மார்செல்லவை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தப்பி விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று ஜோர்டான் லோம்பார்டியை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், வழியில் கார் நின்று விட்டது. இதையடுத்து, மார்செல்லா அந்த வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி, அந்த லாரி ஓட்டுநருடன் துப்பாக்கியை காட்டி மிரட்டி அதில் பயணம் செய்துள்ளார். சிறிது தூரம் சென்றவுடன் பெட்ரோல் போடவேண்டும் எனக் கூறி லாரியை ஓரம் கட்டிய ஓட்டுநர், அங்கிருந்து தப்பி ஓடினார்.
பின்பு இந்த சம்பவம் குறித்து அந்த லாரி ஓட்டுநர் அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து மார்செல்லாவை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இதில் துப்பாக்கியால் சுட்டதால் படுகாயமடைந்த காதலன் லோம்பார்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக தெரியவருகிறது
மேலும் படிக்க