Crime: அதிக மதுபோதை.....நண்பனின் கழுத்தை அறுத்த நண்பர்கள்...சேலத்தில் கொடூரம்..!
பட்டப்பகலில் கழுத்தறுக்கப்பட்டு சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபரைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சேலம் மாநகர் ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவர் மேளம் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர்கள் அருள் குமார், கோவிந்தன் மூவரும் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி மதுபானகடையில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியுள்ளது. இந்த மோதலில் தங்க மணியை அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர்.
இதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். அப்போது பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்னங்குறிச்சி காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலமாக தங்கமணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கமணியை கத்தியால் கழுத்தை அறுத்த அருள் குமார் மற்றும் கோவிந்தன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னிங்குறிச்சி அரசு பள்ளி அருகே ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இந்த வெள்ளத்தில் சாலையில் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடி நின்றதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால் குழந்தைகள் மற்றும் பெண்கள் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்ல முடியாது சூழல் உருவாகி உள்ளது. மேலும் சேலம் பிரதான சாலையில் உள்ள அக்கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என கன்னங்குறிச்சி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்