மேலும் அறிய
Advertisement
திருவாரூரில் பரபரப்பு... பிரபல ரவுடி கொலை வழக்கில் தப்பியோடியவரை சுட்டுப்பிடித்த போலீஸ்
தற்காப்பிற்காக அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் பிரவினின் வலது காலில் முட்டிக்கு கீழ் சுட்டுப் பிடித்தார்.
பிரபல ரவுடி பூவனூர் ராஜ்குமார் கொலையில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க சென்ற உதவி ஆய்வாளரை அறிவாளால் வெட்டி தப்பி ஓட முயன்ற குற்றவாளியை காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் ராஜ்குமாரை நேற்று முன்தினம் 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் முதற்கட்டமாக இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான நடேச தமிழார்வன் மகன் ஸ்டாலின் பாரதி, நடேச தமிழார்வனின் அண்ணன் மகன் வீரபாண்டி, சூர்யா,மாதவன், அரசு ஆகிய 5பேரை தனிப்படை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில் திருவாரூர் அழகிரி காலனி பகுதியை சேர்ந்த ரவி மகன் பிரவின் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணம், மனோரா அருகே பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்ட மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் இருந்தனர்.
பிரவினை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றமுயன்ற போது தான் மறைத்து வைத்திருந்த கொடுவாளால் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவை வெட்டிவிட்டு விட்டு தப்பி ஓட முயற்சி செய்ததோடு மீண்டும் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவை வெட்ட முயற்சி செய்துள்ளார். இதனால் தற்காப்பிற்காக அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் பிரவினின் வலது காலில் முட்டிக்கு கீழ் சுட்டு பிடித்தார்.
இதில் காயம் ஏற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் கொலையாளி பிரவின் ஆகிய 2 பேரையும் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். பிரவின் மீது ஏற்கனவே திருவாருர் நகர ேபாலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை முயற்சி வழக்கு மற்றும் வழிப்பறி செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion