மேலும் அறிய

மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் 

பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், இரண்டு வாரங்களுக்கு காவல்துறை முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகையை ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை அளித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் சிறை அடைக்கப்பட்டுள்ளார். மணிகண்டன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம், பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், இரண்டு வாரங்களுக்கு அடையார் மகளிர் காவல்துறை முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் மணிகண்டன், எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் சில காலம் அமைச்சராக இருந்த அவரை, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். பின்னர், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.


மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் 

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை சாந்தினி என்பவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாக புகார் அளித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை இரண்டாவது திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும், அவரால் மூன்று முறை தான் கருக்கலைப்பு செய்ததாகவும் புகார் அளித்திருந்தார். தன்னைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அதிமுக ஓட்டு குறைய பாஜக-பாமக கூட்டணியே காரணம்; சி.வி.சண்முகம் பேச்சு!

நடிகை சாந்தினியின் புகார் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது சென்னை அடையாறு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் மணிகண்டன் தலைமறைவானார். பின்னர், அவரை போலீசார் கடந்த 20ஆம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இரு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் அனுமதி கோரியிருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் மணிகண்டனை இரு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனை போலீசார் சென்னையில் இருந்து மதுரைக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்துள்ள துணை நடிகை சாந்தினி நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தென்னிந்தியாவிற்கான மலேசியாவின் தூதரக அதிகாரியும் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MKStalin : குட்டி சுட்டீஸோடு புறப்பட்ட முதல்வர்... சொந்த ஊர் செல்லும் வழியில் சுவாரஸ்யம்

 

தலைப்பு செய்திகள்

"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget