மேலும் அறிய

Crime: காதலி இருக்கும்போதே ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை... கல்லூரி மாணவருக்கு சரமாரி அடி, உதை..!

புதுச்சேரி: பெங்களூர் சென்ற சொகுசு பேருந்தில் ஜெர்மன் பெண்ணை பாலியல் தொல்லை செய்ய முயன்ற கல்லூரி மாணவருக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது.

புதுச்சேரி: ஜெர்மன் நாட்டை சேர்ந்த 20 வயது இளம்பெண், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா கோணமங்கலம் கிராமத்தில் தங்கியிருந்து சமூக பணியாற்றி வருகிறார். இவர், புதுவையில் இருந்து பெங்களூருக்கு தனியார் சொகுசு பேருந்தில் சென்றார். நள்ளிரவில் பஸ்சில் அவருக்காக ஒதுக்கிய படுக்கையில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த அவரை, பக்கத்து சீட்டில் இருந்த வாலிபர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்தார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர் கூச்சலிட்டார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு, வெளிநாட்டு பெண்ணிடம் விசாரித்தார்.

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை:

அப்போது பக்கத்து இருக்கையில் இருந்த வாலிபர் தன்னை பாலியல் தொல்லை செய்ய முன்றதாக கூறினார். இதையடுத்து அந்த வாலிபருக்கு பயணிகள் தர்மஅடி கொடுத்து பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டனர். தொடர்ந்து அந்த பெண் அதே பேருந்தில் பெங்களூரு சென்றார். பின்னர் புதுச்சேரி திரும்பிய அவர், பேருந்தில்  நடந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

 புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பட்டியலை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒரு பெண்ணின் செல்போன் எண் மூலம் அந்த டிக்கெட் பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தியதில், பெங்களூரு பாவனி நகர் ஓசூர் மெயின் ரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவரும், ஆக்கி விளையாட்டு வீரருமான சரத் (வயது 22) என்பவர் தனது காதலியுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துவிட்டு, அந்த பஸ்சில் பயணம் செய்தது தெரியவந்தது.

ஹாக்கி வீரர் கைது:

 உடனே போலீசார் சரத்தை கைது செய்து புதுவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரத் அந்த பஸ்சில் ஏறிய பிறகு தான் ஜெர்மன் பெண் ஏறியுள்ளார். சரத், காதலியுடன் இருக்கும்போதே அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். அந்த பெண்ணும் முதலில் சகஜமாக பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் சரத்தின் பேச்சு எல்லை மீறியதால் அந்த பெண் அவரிடம் பேசுவதை தவிரித்துள்ளார்.

நள்ளிரவில் பஸ் திண்டிவனம் பகுதியில் சென்றபோது, பயணிகள் அனைவரும் தூங்கிவிட்டனர். பக்கத்து இருக்கையில் இருந்த சரத்தின் காதலியும் அயர்ந்து தூங்கிவிட்டார். இந்த நிலையில் தனது படுக்கையில் இருந்து இறங்கிய சரத், ஜெர்மன் பெண்ணின் படுக்கையில் ஏறி, அவரை பாலியல் தொல்லை செய்ய முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சரத்தை போலீசார் புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget