மேலும் அறிய

கோவையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி.. வெளியான வீடியோ

கல்லூரி மாணவர்களை கொடூரமாக தாக்கி அவர்களிடம் பணம் பறிப்பதும், ஜூனியர் மாணவர்களை ரோட்டில் அடிப்பதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன

கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில்  கைதான இளைஞர் தன்னுடன் பயின்ற மாணவர்களை தாக்குதல், கையில் பட்டா கத்தியுடன் சுற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவை உப்பிலிபாளையம் ராஜிவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் லாவண்யா. கல்லூரி மாணவியான லாவண்யா தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி லாவண்யாவிஷம்  குடித்து தற்கொலை  செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

அதில் மாணவியின் வீட்டின் அருகில் தங்கி படித்து  வந்த கேசவ்குமார் என்ற மானாமதுரையை சேர்ந்த மாணவர், கல்லூரி மாணவியை அடிக்கடி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. மேலும் மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியதால் அச்சமடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர் மானாமதுரையில் வீட்டில் இருந்த கேசவ குமாரையும் அவரது தாயார் மங்கையர்கரசியும் கைது செய்தனர். பணம் பறிக்கும் கேசவ குமாரின் நடவடிக்கைகள் தெரிந்தும், அவற்றுக்கு உடந்தையாக இருந்ததால் மங்கையர்கரசியையும்  சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி.. வெளியான வீடியோ

இந்நிலையில் கைது செய்யப்பட்ட  கேசவ குமாரின் செல்போனை காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் இருந்த வீடியோக்களை பார்த்த சிங்காநல்லூர் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதில் அறை எடுத்து தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களை கொடூரமாக தாக்கி அவர்களிடம் பணம் பறிப்பதும், ஜூனியர்  மாணவர்களை ரோட்டில் அடிப்பதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் கையில் கத்தியுடன் வீடியோக்கள் பல எடுத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. தற்போது இந்த காட்சிகள் வெளிவந்துள்ளன.

கோவையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி.. வெளியான வீடியோ

இந்த காட்சிகள் தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜூனியர் மாணவர்களை அவர்களின் அறைக்கு  சென்று மிரட்டி தாக்குவதும், அவர்களிடம் ஜூனியர் மாணவிகளின் செல்போன் எண்களை வாங்கி அவர்களை மிரட்டி பணம் பறிப்பதையும் வாடிக்கையாக வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேசவ்குமாரால்  வேறு கல்லூரி மாணவிகள், மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அது தொடர்பாகவும்  விசாரணை மேற்கொள்ள காவல் துறையினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

கோவையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி.. வெளியான வீடியோ

மானாமதுரையை சேர்ந்த கேசவ்குமார் கல்லூரியில் மோசமாக நடந்து கொண்டதன் காரணமாக நவ இந்தியா அருகே உள்ள தனியார் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். இருந்தாலும் கல்லூரி அருகே அறை எடுத்து தங்கி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்து இருந்திருப்பதும், இந்த செயல்களுக்கு அவரது தாயாரும் உடந்தையாக இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது அம்மாவும், மகனும்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்,  சிங்காநல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
கோலியின் சத வேட்டை: சச்சினின்
கோலியின் சத வேட்டை: சச்சினின் "நூறு சதங்கள்" சாதனையை முறியடிக்க இன்னும் எத்தனை சதங்கள் தேவை?
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
கோலியின் சத வேட்டை: சச்சினின்
கோலியின் சத வேட்டை: சச்சினின் "நூறு சதங்கள்" சாதனையை முறியடிக்க இன்னும் எத்தனை சதங்கள் தேவை?
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
Modi Vs Trump Tariff: ட்ரம்ப்பிற்கு எதிர்பாராத ஆப்பு வைத்த மோடி; அலறித் துடிக்கும் அமெரிக்க பருப்பு வியாபாரிகள்; என்ன பிரச்னை.?
ட்ரம்ப்பிற்கு எதிர்பாராத ஆப்பு வைத்த மோடி; அலறித் துடிக்கும் அமெரிக்க பருப்பு வியாபாரிகள்; என்ன பிரச்னை.?
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
Embed widget